
நடுவிலே ஓய்வுபெறும் ராணி பியாத்ரிக்ஸுடன் புதிய மன்னராகும் அலெக்ஸாந்தரும் அவர் மனைவி மாக்ஸிமாவும் நிற்கின்றனர்.
நெதர்லாந்தில் ஆட்சிமுடி புதிய தலைமுறைக்கு கைமாறும் நிகழ்வைப் பார்ப்பதற்காகவும் கொண்டாடுவதற்காகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆம்ஸ்டர்டாம் நகரில் கூடிவருகின்றனர்.
நெதர்லாந்து அரசி பியாத்ரிக்ஸ் செவ்வாயன்று அரசியின் பொறுப்பிலிருந்து கடைசியாக தான் நிறைவேற்றுகின்ற காரியத்தை செய்துவிட்டு, அரசி பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றுக்கொள்ளும் ஆவணத்தில் கையொப்பமிடுகிறார்.
இதன் மூலம் பியேத்ரிக்ஸின் மூத்த மகன் வில்லெம்-அலெக்ஸாந்தர் புதிய மன்னர் பொறுப்பை ஏற்பார்.
ஹாலந்தில் கடந்த நூறு வருடங்களில் ஆண் மன்னர் எவரும் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியாக மக்களுக்கு ஆற்றிய கடைசி உரையில், தனக்கு அடுத்ததாக அரச பதவிக்கு வருபவர் அனைத்து வழிகளிலுமே மன்னர் பொறுப்பின் சவால்களை ஏற்கத் தாயாராக இருக்கிறார் என்று பியாத்ரிக்ஸ் நம்பிக்கை தந்தார்.
செவ்வாய் மதியம் வில்லெம் அலெக்ஸாந்தர் முடிசூட்டப்படுவார். அலெக்ஸாந்தரின் மனைவியான அர்ஜெண்டினாவில் பிறந்த மாக்ஸிமா அரசியாக அறிவிக்கப்படுவார்.
ஹாலந்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர் மாக்ஸிமா.
புதிய மன்னர் முடிசூடுவதை முன்னிட்டு ஆம்ஸ்டர்டாம் நகரின் கால்வாய்கள் வழியாக அலங்கார அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

Post a Comment