ஒருபால் உறவுக்காரர்கள் உரிமைக்கு ஆதரவு தந்தார் என்பதற்காக பிரசிலின் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார் ஒருவரை மதத்திலிருந்தே வெளியேற்றியுள்ளது.
அருட்தந்தை ரொபெர்தோ ஃபிரான்ஸிஸ்கோ தனியலின் கருத்துக்கள் மதபோதனைக்கு எதிரானதாகவும் மதக் கட்டமைப்பை பிளவுபடுத்துவதாகவும் உள்ளது என பவுரு என்ற மறை வட்டகை விபரித்துள்ளது.
ஒருவருடைய பாலுறவு விருப்பத் தெரிவு சம்பந்தமாக கத்தோலிக்கத் திருச்சபை தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும், சிலர் இயல்பிலேயே ஒருபால் உறவினர் என்பதே யதார்த்தம் என்று அது ஒப்புக்கொள்ள வேண்டும் என இந்தப் பாதிரியார் வலியுறுத்தியிருந்தார்.கத்தோலிக்க மத நம்பிக்கையை தாக்கும் செயல் என்று குறிப்பிட்டு, அப்படியான செயல்களைச் செய்யும் உரிமை கத்தோலிக்கர் எவருக்குமே இல்லை என்று அது கூறியுள்ளது.
அனைவராலும் பிரியமுடன் அருட்தந்தை பீடோ என்று அழைக்கப்பட்டுவந்த இப்பாதிரியார், திருச்சபை இவ்விவகாரத்தில் கொண்டுள்ள நிலைபாட்டுக்காக தான் பாதிரியார் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக முன்கூட்டியே அறிவித்திருந்தார்.
பதவி விலகுவதற்கு முன்பாக விடைபெறும் விதமாக அவர் செய்த கடைசி திருப்பலி பூசையில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.
.jpg)
Post a Comment