பாடசாலை சிறுமிகள் மீது துஸ்பிரயோகம்-
பாடசாலை செல்லும் வயதை கொண்டுள்ள சிறுமிகள் பல்வேறு துஸ்பிரயேகத்திற்கும் உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பாடசாலை செல்லும் வயதை கொண்டுள்ள சிறுமிகள் பல்வேறு துஸ்பிரயேகத்திற்கும் உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலீஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைகாலமாக, நாட்டின் பல பாகங்களில் சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ளும் போது அவர்களில் பெரும்பாலனவர்கள் மனநோயாளிகளாக காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டவர்களில் இலங்கையர்கள் இல்லை-
நைஜீரிய கடல் பரப்பில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்படுள்ளது. எனினும் குறித்த கப்பலில் 14 இலங்கையர்கள் பணி புரிகின்றனர்.
நைஜீரிய கடல் பரப்பில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்படுள்ளது. எனினும் குறித்த கப்பலில் 14 இலங்கையர்கள் பணி புரிகின்றனர்.
நைஜீரியாவுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் தாங்கிக் கப்பல் ஒன்றை கடற்கொள்ளையர்கள் கடந்த 25ஆம் திகதி கைப்பற்றினர்.
கப்பலுக்குள் பிரவேசித்த கடற்கொள்ளையர் 5 மாலுமிகளையும் கப்பலில் இருந்த பெருந்தொகையான பணத்தினையும் கைப்பற்றிய நிலையில், தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், கடத்திச் செல்லப்பட்டவர்களில் இலங்கையர்கள் மூவர் இருப்பதாக முன்னர் செய்திகள் வெளியிடப்பட்டன.
எனினும், தற்போது கிடைந்த செய்திகளின் படி கடத்தப்பட்டவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்ஜசீரா அலைவரிசை உரிமம் இரத்து-
அல்ஜசீரா உட்பட 10 டி.வி. அலைவரிசைகளின் உரிமத்தை இரத்து செய்யுமாறு ஈராக் அரசு நேற்று முன்தினம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அல்ஜசீரா உட்பட 10 டி.வி. அலைவரிசைகளின் உரிமத்தை இரத்து செய்யுமாறு ஈராக் அரசு நேற்று முன்தினம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஈராக்கில் அண்மைகாலமாக ஷியா மற்றும் சுன்னி பிரிவினரிடையே மீண்டும் மோதல்கள் தலைதூக்கி வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இவர்களுக்குள் நிகழ்ந்த பல்வேறு மோதல் சம்பவங்களில் 180க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
இந்த மோதல்களைப் பற்றி சன்னி பிரிவினர் மற்றும் ஷியா பிரிவினர் நடத்தி வரும் தனியார் டி.வி. அலைவரிசைகள் மிகைப்படுத்தி செய்தி வெளியிட்டு வருவதாகவும் அவரவர் சார்ந்த இனத்திற்கு சாதகமாகவும், எதிர் இனத்திற்கு பாதகமாகவும் சில செனல்கள் ஒருதலை பட்சமாக செய்தி வெளியிட்டு வருவதாக ஈராக் ஊடக நிலையத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதனையடுத்து, அல்-ஜசீரா, அல்-ஷரீக்கியா, பாக்தாத், பலுஜா, அல்-கர்பியா உள்ளிட்ட 10 தனியார் டி.வி. அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ஈராக் அரசு நேற்று முன்தினம் இரத்து செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Post a Comment