மது விற்பனை நிலையத்தில் ரூபா 40 இலட்சம் கொள்ளை


மாத்தளை நகரில் உள்ள ஒரு வெளிநாட்டு மது விற்பனை நிலையத்தின் நிதிப் பிரிவு ஒன்றில் ரூபா 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இச் சம்பவம் நேற்று புதன்கிழமை நண்பகல் வேளையில் துணிகரமாக இடம்பெற்றுள்ளது. மது விற்பனை நிலைய நிதி சேகரிக்கும் பிரிவிற்குள் இரு கொள்ளையர்கள் பிரவேசித்து முகாமையாளரின் கை, கால் போன்றவற்றை ஆயுத முனையில் கட்டி வைத்து பயமுறுத்தி பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger