ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகிலுள்ள திருப்பாலைக்குடியை
சேர்ந்தவர் மீரா மைதீன். இவருக்கு நான்கு குழந்தைகள். வயிற்றுப் பிழைப்பிற்காக
மீரா மைதீனும், அவரது மனைவி பரிதாவும் துபாய்க்கு வேலைக்கு போக வேண்டிய
கட்டாயம். அப்படிப் போகும்போது தங்களுடைய நான்கு பிள்ளைகளையும் பரிதாவின் தம்பி
ரமலான் அலி என்பவரின் பராமரிப்பில் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
குழந்தைகளை
பராமரிப்பதற்காக மீரா மைதீன், மாதம் தவறாமல் ரமலான் அலிக்கு பணம் அனுப்பி இருக்கிறார்.
அதை ஊதாரித்தனமான செலவு செய்த அலி, செய்யக்கூடாத இன்னொரு காரியத்தையும் செய்திருக்கிறார். மீரா
மைதீனின் மூன்றாவது மகளை (வயது 13) நான்கு மாதங்களுக்கு முன்பு, கீழக்கரையில்
உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வீட்டு வேலைக்காக ஒரு லட்ச ரூபாய்க்கு விலை பேசி
விற்றிருக்கிறார்.
படிப்பில்
ஆர்வமாக இருந்த அந்த சிறுமி, கடுமையான வீட்டு வேலைகளை செய்ய முடியாமல் கதற, அதைப்
பொருட்படுத்தாமல், விலைக்கு வாங்கியவர்கள் அந்த பிஞ்சுக் குழந்தையை அடித்துக்
கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். அங்கிருந்து எப்படியோ தப்பித்த அந்தச் சிறுமி, , ரோட்டில்
அநாதை போல் சுற்றி அலைந்திருக்கிறாள்.
விஷயம்
அறிந்த அந்தப் பகுதி இளைஞர்கள் சிலர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல்
கொடுத்திருக்கிறார்கள். சிறுமியிடம் விசாரணை நடத்திய குழந்தைகள் நல அலுவலர்
சகுந்தலா,
வீட்டு
வேலைக்காக சிறுமி விற்கப்பட்ட உண் மையை அறிந்து பதறிப் போயிருக்கிறார்.
உடனடியாக
இதுகுறித்து கீழக்கரை போலீஸில் அவர் புகார் கொடுக்க, ரமலான் அலி
மீது கடத்தல் மற்றும் சிறார்களுக்கு எதிரான வன்கொடுமை பிரிவுகளில் இன்று வழக்குப்
பதிவு செய்து ரிமாண்டுக்கு அனுப்பி இருக்கிறது போலீஸ். அபலைச் சிறுமி அரசு
காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்.
" வீட்டு வேலைக்காக ஏழைக் குடும்பத்து பெண் குழந்தைகளை
அடிமாட்டு விலைக்கு விற்பதும், பின்னர் அந்தக் குழந்தைகளை விலைக்கு வாங்கியவர்கள், பாலியல்
கொடுமைகள் உள்ளிட்ட உச்சபட்ச கொடுமைகளுக்கு உள்ளாக்குவதும் ராமநாதபுரம் ஏரியாவில்
தொடர் சம்வங்களாக நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில இடங்களில் பெண் குழந்தைகளை
மதம் மாற்றும் சம்பவங்களும் நடக்கின்றன" என்று பகீர் கிளப்பும் சமூக
ஆர்வலர்கள்,
'மாவட்ட
குழந்தைகள் நல அலுவலரும், காவல் துறையும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், பல
அப்பாவிக் குழந்தைகளுக்கு கொத்தடிமை வாழ்க்கையி லிருந்து விடுதலை கிடைக்கும்"
என்கிறார்கள்
Post a Comment