ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைக்கு நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைக் குழுவிற்கு இலங்கை அரசாங்கம் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.
இந்த குழுவில், பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், சமாதான செயற்பாடுகளுக்கான நோபல் பரிசை பெற்றவருமான மார்டி அதிசாரி, நியுசிலாந்தின் முன்னாள் ஆளுனரும், உயர் நீதிமன்ற நீதிபதியுமான சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தானின் மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோர் அடங்குகின்றனர்.(
Post a Comment