ஆறு மாத காலத்திற்குள் 30 ஆயிரம் கோடி ரூபா ஊழல்!



இலங்கை அரச நிறுவனங்களில் 2013 அக்டோபர் துவக்கம் 2014 ஏப்ரல் வரைக்கும் 30,000 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை ஊழல் செய்யப்பட்டிருப்பதாக கோப் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
பாராளுமன்ற பொது நடவடிக்கை தொடர்பிலான கோப் குழுவினர் தயாரித்திருக்கும் இவ்வறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப் படவுள்ளது.
கோப் குழுவினர் இவ் ஊழல் தொடர்பில் அடிக்கடி அரசாங்கத்தின் கவனத்துக்கு எடுத்து வந்தும் ,எதுவித மாற்றங்களும் ஏற்படாத நிலையில்,இம்முறை அவர்கள் குறித்த ஊழல் விபரங்களை எழுத்து மூலம் அறிவிக்க இருப்பதாகவும் தெரிய வருகின்றது.
மின்சார சபை,பெற்றோலியக் கூட்டுத்தாபனம்,காப்புறுதிக் கூட்டுத்தபனம்,போக்குவரத்துச் சபை,சுங்கம்,இறைவரித் திணைக்களம்,புகையிரதத் திணைக்களங்களிலேயே அதிக ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2013 இல் மட்டும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 23,600 கோடி ரூபாவில் நஷ்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்க அதேநேரம்,உலகில் நஷ்டத்தில் இயங்கிய ஒரே பெற்றோலிய நிறுவனம் இதுதான் என விமர்சனங்களும் எழுந்திருந்தமையும் ஈண்டு குறிப்பிடத்தக்கதே.
Share this article :

+ comments + 1 comments

July 22, 2014 at 12:06 PM

Ettina kodi uulal seitalum 30 years war entru sonna udane sinhala ven avantan nallam enpan,,, oru sila nammavarum tan,,

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger