இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற (சிறிகொத்தாவில்) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது....
எங்களுக்கு நினைவிருக்கின்றது ஹலால் பிரச்சினை எமது நாட்டிற்குள் தலை எடுக்கும் போது அதற்குப் பின்னால் பாதுகாப்புச் செயலாளர் இருக்கிறார் என்று இதற்கு முன்னரும் நாம் சொல்லி இருக்கின்றோம்.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த கொலை கொள்ளைச் சம்பவங்களுக்கு பின்ணணியில் கோட்டபாயவும் பொதுபல சேனாவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் மேல் பற்று வைத்திருக்கும் மக்கள் இதை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.இச் சம்வத்தோடு விமல் வீரவன்சவின் சிங்கள ராவய போன்ற அமைப்பும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்கின்றன. பாதுகாப்பு படையினரின் அனுமதியுடன் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மற்றும் கடைகள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
அரச அனுமதி பெற்ற அமைப்புக்கள் இவர்கள். இவர்களது வேலை வணங்கிக் கொண்டு மனிதர்களை கொல்லுபவர்கள், பண (பௌத்த சொற்பொழிவு) கேட்டுக் கொண்டு மனிதர்களை கொல்வார்கள். இவர்கள் காட்டுமிராண்டிகள். இவர்கள் அளுத்கம பிரதேசத்தில் வீட்டில் ஆண்கள் இல்லாத வேளையில் பெரும்பாலான வீடுகளை கொள்ளையடித்துள்ளார்கள்.இதற்கு நான் சிங்களவன் என்ற வகையில் வெட்கப்படுகின்றேன்.
அளுத்கமவில் உள்ள ஒரு பழைய வீட்டில் உயர் தரம் கொண்ட வீட்டு பொருட்களை பெரிய வாகனங்ளை கொண்டு களவெடுத்துச் சென்றுள்ளார்கள். தர்கா நகரில் 02 பேரை சுட்டு கொன்றார்கள்.ஆனால் இப்போது அவை பொய் என்று வைத்திய அறிக்கையை கூட மாற்றி எழுதி இருக்கின்றார்கள்.இந்த காட்டு மிராண்டி அரசாங்கம்.
அமைச்சர் ஹக்கீம் கூறியுள்ளார் எமது நாட்டில் பொய் வைத்திய அறிக்கை கொடுக்கும் அளவிற்கு குற்றச் செயல்கள் மலிந்து விட்டதை இட்டு நீதி அமைச்சராக இருக்கும் நான் வெட்கப்படுகின்றேன் என்று,
நான் ஜனாதிபதியிடம் கூறுகின்றேன் பொலியாவில் இருந்து வந்து தர்கா நகர் பிரதேச சபையில் சிறிய கூட்டம் ஒன்றை வைத்து விட்டு வந்துள்ளார். ஜனாதிபதி அவர்களே நீங்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தியுங்கள். என நான் அவருக்கு சொல்கின்றேன்.அங்கிருக்கும் சிங்கள மக்கள் சொல்கின்றார்கள் நாங்கள் முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக இருந்தோம். இதற்குப் பின்னால் இருப்பது அரச கைக்கூலிகளே தவிர சாதாரண பொதுமக்கள் அல்ல என்று அவர்கள் சொன்னார்கள்.
அதற்குப் பின்னர் பாணத்துறை நோலிமிட் தீக்கிரையானது.அதற்கும் அரசு சொன்ன பதில் வயர் சோட் என்று ஆனால் நோலிமிட் பற்றி எரியும் போது அருகில் இருந்த சிசிடிவி கமராவில் நோலிமிற்றுக்கு அருகில் இருவர் நடமாடியாதாக பதிவாகியுள்ளது என்றார்.அவர்களில் ஒருவரிடம் ஏதோ ஆயுதம் இருக்கின்றது மற்றவரிடமும் ஆயுதம் இருப்பது அந்தக் கமராவில் பதிவாகியுள்ளது. அதனது புகைப்படத்தையும் காட்டினார்.
ஆனால் இன்று பொலிஸாரையும் கோட்டா கட்டுப்படுத்தி வைக்கின்றார். கைதுசெய்யப்பட்ட 13பேரையும் பாதுகாப்புச் செயலாளரின் அழுத்தத்தினால் விடுவிக்கப்பட்டனர். நான் சொல்கின்றேன் இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருப்பவர் கோட்டாபய ராஜபக்சதான்.பொதுபலசேனா சிங்கள ராவய இவை இரண்டும் பாதுகாப்பு அனுசரணையுடன் இயங்கும் அமைப்புக்கள்.
இவர்கள் சொல்வது போன்று இலங்கையில் ஜிகாத் உறுப்பினர்கள் இல்லை அப்படி ஒருவராவது இருப்பாராயின் அவரை கோட்டாபய காட்டட்டும் என ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமர வீர கோட்டாவிற்கு சவால்விட்டார்.
Post a Comment