அளுத்துகம பேருவளை சம்பவங்கள் தொடர்பிலான பொலிஸ் விசாரணைகளில் நம்பிக்கையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்த இருபது பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்த விசாரணைகளில் நம்பிக்கை கிடையாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடாத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டுமென கோரியுள்ளது.
ஒரு மாதம் போன்ற ஓர் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையில் ஜனாதிபதி விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
உதாரணமாக அளுத்கம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இரண்டு முஸ்லிம்களின், மரணச் சான்றிதழ்களிலும் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸார் தொடர்பிலான மக்களின் நம்பிக்கை வலுவிழந்துள்ளதாக ஹசன் அலி தெரிவித்துள்ளர்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment