அளுத்கம, தர்கா நகரில் இடம்பெற்றது மதக் கலவரம் அல்ல. பிக்கு ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடிப்படையாக வைத்து ஏற்பட்ட இரு குழுக்களுக்கிடையிலான மோதலேயாகும் என மத விவகார விசேட பொலிஸ் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது மத வன்முறையாக இருந்தால் மத விவகார பொலிஸ் பிரிவுக்கு முறைப்பாடுகள் செய்திருப்பர். ஆனால், இதுவரையில் இப்பிரிவுக்கு இப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்திருந்தால், உடனடியாக இப்பிரிவு குறித்த முறைப்பாட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுத்திருக்கும்.
இது இரு மதங்களுக்கிடையில் ஏற்பட்ட ஒரு மோதல் அல்ல. பொலிஸ் மா அதிபர் உட்பட பல அதிகாரிகள் அதில் தலையிட்டு பிரச்சினையை கடடுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். இது மத விவகார விசேட பொலிஸ் பிரிவுக்கு சம்பந்தப்பட தேவையில்லை என்பதனாலேயே இவர்கள் இவ்வாறு செயற்பட்டார்கள்.
இந்தச் சம்பவம் குறித்த முறைப்பாடுகள் ஒரு அமைப்புக்கு எதிராகவே முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால், மத விவகாரப் பிரிவினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாதுள்ளது. இதற்கு நாட்டிலுள்ள சாதாரண சட்டத்தின் படியே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பௌத்த மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.பி. திஸாநாயக்க சிங்கள தேசிய ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
கண்களுக்கு முன் இடம் பெற்ற பச்சை இனச் சுத்திகரிப்பை இரு குழுக்களுக்கிடையிலான மோதல் என்று மத விவகார பொலிஸ் அதிகாரி அறிவிப்பதானது அயோக்கியத் தனத்திலும் பச்சை அயோக்கியத் தனம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், மத விவகார போலிஸ் பிரிவும் பக்கச் சார்பான ஓர் பிரிவு என்பதும், முஸ்லிம்கள் இவர்களிடம் பாதுகாப்பையும், உத்தரவாதத்தையும் எதிர்பார்ப்பது மண் கதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகவே அமையும்.
Post a Comment