தொடங்கி விட்டது ஐ.நா விசாரணை அந்தரத்தில் கொழும்பு அரசு…


சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா நிபுணர் குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் படி, இந்த விசாரணைகள் தொடர்பாக, வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள பேரவையின் 27வது அமர்வில் வாய்மூல அறிக்கையையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பேரவையின் 28வது அமர்வில் விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்.
சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும், இதுபோன்ற ஏனைய சந்தர்ப்பங்களில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது போல, நன்கு பரீட்சிக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும், மூன்று பேர் கொண்ட வெளியக நிபுணர்கள் பற்றிய அறிவிப்பை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

+ comments + 1 comments

June 27, 2014 at 5:26 AM

Govt can't simply avoid the UN inquiry on SL for war crimes by a resolution in the Parlament. Tgeir duty is to dusorof the allegations not like releasing the culprits on the whims and fancies of the Terrotist Org BBS Secretary Galabida

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger