ஐ.நா மனித உரிமை சபையின் புதிய ஆணையாளராக ஜோர்தான் தூதுவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா மனித உரிமை சபையின் புதிய ஆணையாளராக ஜோர்தான் தூதுவர் பிரின்ஸ் செயித் அல் {ஹசைன் நியமிக்கப்படவுள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆசியாவின் குரலாக பிரின்ஸ் செயித் அல் {ஹசைன் இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நாவின் நீண்ட கால இராஜதந்திரியும் முன்னாள் ஐ.நா சமாதான காப்பாளருமாகிய பிரின்ஸ் செயித் அல் {ஹசைனின் பெயரை ஐ.நா செயலாளர் நாயகம் பரிந்துரை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை 2012ம் ஆண்டில் ஓய்வு பெறவிருந்த நிலையில் அவரது பதவிகாலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் இவ்வருடம் ஜூலை மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் ஓகஸ்ட் மாதத்தில் இருந்து புதிய மனித உரிமை ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
முன்னதாக அனுபவம்வாய்ந்த ஐ.நா இராஜதந்திரி மர்சுகி தருஸ்மன் நவிபிள்ளையின் பதவிக்கு நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment