இனவாதத் தீயில் இரையான அன்பர்களின் துயர் துடைக்க ஈமானிய சொந்தங்களே உதவிக் கரம் நீட்டிடுவீர்!



وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ

“தனது சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவுவான்” – நபி மொழி


அளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட பச்சை இனவாத தாக்குதலினால் ஏராளமான நம் கொள்கைச் சகோதரர்கள் இருப்பிடம் இழந்து இக்கட்டில் சிக்கியுள்ளனர்.

உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டு, உயிர்களை மட்டும் மீதம் வைத்தவர்களாய் எம் தொப்புல் கொடி உறவுகள் திக்கற்று திகைத்து நிற்கின்றனர்.

உடைமையும் இழந்து, உறவுகளையும் இழந்து கண்ணீருடனும் உளம் நிறைந்த ஏக்கத்துடனும் வீற்றிருக்கும் நம் உறவுகளின் துயர் துடைப்பது அல்லாஹ்வை ரப்பாக ஏற்ற ஒவ்வொரு முஸ்லிமினதும் ஈமானியக் கடமையல்லவா?

நிர்க்கதிக்கு உள்ளான நம் சொந்தங்களின் துயர் துடைக்கும் நிவாரணப் பணியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தற்போது முழு மூச்சாய் களத்தில் இறங்கியுள்ளதை தாழ்மையுடன் அறியத் தருகின்றோம்.

கீழ்காணும் உதவிகளை எமக்கு பணமாகவோ பொருளாகவோ தந்துதவுமாறு வினயமாய் கேட்டுக் கொள்கின்றோம்.

  • உலர் உணவு பொருட்கள் (அரிசி, சீனி, மா, பால் மா, பருப்பு வகைகள், நூடில்ஸ்…)
  • புத்தாடைகள்
  • மருத்துவ உதவிகள்
  • தண்ணீர் போத்தல்கள்
  • கட்டட புணர் நிர்மான உதவிகள்
  • வாழ்வாதார வசதிகள்

மேற்படி உதவிகளை பணமாகவோ பொருளாகவோ எமக்கு தந்துதவ முடியும்.

பணமாக உதவ விரும்புவோர் கீழ்காணும் வங்கிக்கணக்கிற்கு வைப்புச் செய்யவும்.

M.T.M.Farzan

Hatton National Bank

Acc.No: 025020324642

Telephone Number : 0779481767

நேரடியாக வந்து உதவிகளை செய்ய விரும்புவோர் தலைமையில் ஒப்படைக்க முடியும்.

Sri Lanka Thowheed Jamath
241A, Sri Saddharma Mawatha,
Maligawatte
Colombo – 10

நன்மைகளை அள்ளித் தரும் இந்நற்பணிக்கு உங்கள் பொருளாதாரத்திலிருந்து அள்ளி வழங்குமாறு அன்பாய் வேண்டுகிறோம்.

இன்று இவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலை நாளை உங்களுக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பதை ஒன்றுக்கு பலவிடுத்தம் சிந்தித்து உதவிகளை வாரி வழங்குமாறு கேட்கின்றோம்.

இப்படிக்கு,

எம்.டீ.எம்.பர்ஸான்

துணைத்தலைவர் மற்றும் வசூல் பிரதிநிதி


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்





Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger