அளுத்கம சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தர்கா நகர் உள்ளிட்ட பல பிரதேசங்களின் மீள் கட்டுமானத்திற்கு 150 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாய்யக தெரிவித்தார்.
இந்த நிதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இராணுவத்திற்கு நேற்று ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்ஸிலின் கூட்டமொன்று தற்போது தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று இடம்பெற்றது. இதில் விசேட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். சுமூகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்களை நம்பக்கூடாது. அனைவரும் இந்த நாட்டிலேயே பிறந்தவர்கள். இதன் அடிப்படையிலேயே நாம் செயற்பட்ட வேண்டும். முன்னரும் இராணுவம் முஸ்லிம்களை பாதுகாத்துள்ளது. அதுபோன்று எதிர்காலத்திலும் முஸ்லிம்களை இராணுவம் பாதுகாக்கும்" என்றார்.
Post a Comment