அதேவேளை, சிறிலங்கா அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தத்தையும் சிறிலங்கா அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், தெற்காசிய நிறுவனத்துக்குத் தாம் அளித்துள்ள பேட்டியில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
13ஆவது திருத்தம், சிறிலங்காவில் தமிழர்களும் இதர சிறுபான்மையினரும் உரிமையோடும் கெளரவத்தோடும் வாழ வழியமைக்கிறது. இக்கூற்றை இந்தியா உறுதிப்படுத்துகிறது என்றும் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் செய்து கொள்ளப்பட்ட இந்திய – சிறிலங்கா ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டுமென்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
இது விடயத்தில் சிறிலங்கா அரசு எமது உதவியைக் கோரியுள்ளது.
இந்தியாவில் நடைமுறையில் உள்ளது போல் மத்தியில் குவிந்துள்ள அதிகாரம் மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளோம்.
சிறிலங்கா ஓர் இறையாண்மை படைத்த நாடு. ஆகவே, அவர்களெ தம் நாட்டைப்பற்றி முடிவெடுக்க வேண்டியவர்கள்.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக இலங்கை தமிழர்கள் உட்பட ஏனைய சிறுபான்மை இனத்தவர்கள் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கான உறுதிப்பாடுகளை இந்தியா வழங்கும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment