யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குள் குடிபோதையில் வாகனம் செலுத்திய 15 பேரும், அடித்து காயப்படுத்திய 16 பேரும், கொள்ளையுடன் தொடர்புடைய 02 பேரும் சட்டவிரோதமான முறையில் மது விற்பனை செய்த 06 பேரும், சந்தேகத்தின் பெயரில் 13 பேரும், பிடியானை பிறப்பிக்கப்பட்ட 12 பேரும், சமாதானத்திற்க்கு பங்கம் ஏற்படுத்திய 04 பேரும், களவு சம்பந்தமாக 08 பேரும், ஏனைய குற்றங்கள் சம்பந்தமாக13, பேருமாக 89 பேர் கைது, செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்கள்.
காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் பாரிய குற்றங்கள் சம்பந்தமாக 04 பேரும், சந்தேகத்தின்பெயரில் 20 பேரும் ,சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமாக 02 பேரும், பிடியானை பிறப்பிக்கப்ப்டட 03 பேரும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 02 பேரும், ஏனைய குற்றங்களுக்காக 19 பேருமாக ஐம்பது பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்கள். எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment