வாடிக்கையாளரை கவர விபசாரிகளுக்கு சீன நிறுவனங்கள் பாடம் நடத்துகின்றன.
மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள சீனாவில் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இங்கு ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற விவரங்கள் நாம் அறிந்தவை.
ஆனால் அறியாத வெளியே தெரியாத பல விஷயங்கள் அங்கு உள்ளன. சீனாவில் சில பெண்கள் நிறுவனங்களை நடத்துகிறார்கள்.
அவர்களின் தொழில் என்ன தெரியுமா? பேஸ்புக் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து தங்கள் வசம் இழுப்பது எப்படி என விபசாரிகளுக்கு பாடம் கற்று கொடுக்கின்றனர்.
விபசார தொழிலில் ஈடுபடும் பெண்கள் வீதிகள் மற்றும் விடுதிகளில்தான் தங்களது வாடிக்கையாளர்களை பிடிப்பது வழக்கம்.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தொழில் புரட்சி மற்றும் போட்டிக்கு ஈடு கொடுக்கும் வகையில் அவர்களுக்கு இதுபோன்று பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனங்களை பெண்கள்தான் ஆரம்பித்துள்ளனர்.
அங்கு விபசாரிகளை அழைத்து அவர்களின் தொழில் வளர்ச்சிக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி இலவசம் அல்ல.
இதற்காக விபசாரிகளிடம் இருந்து மிகப்பெரிய தொகை வசூலிக்கப்படுகிறது. இத்தொழில் சீனாவில் மறைமுகமாக கொடிகட்டி பறக்கிறது.
தோல்வியைத் தழுவும் சோசலிஸமும், இஸ்லாத்தை வேண்டும் நவீன உலகமும்!
மக்களுக்கு வழிகாட்ட வந்த சோசலிஸமும், முலாளித்துவமும், ப்ரைடிஸமும், டாவினின் கூர்ப்புக்கொள்கையும் இன்று படுதோல்வியடைந்து வருவதை உலக நடப்புகள் உண்மைப்படுத்துகின்றன. பணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட முதலாளித்துவத்தால் அமெரிக்காவே ஆட்டம் கண்டுவிட்டது. சமவுடைமை வாதம் பேசிய சோவியத் ரஷ்யாவே இன்று சிதறிய செங்கல்லாக மாறிவிட்டது. பாலியல் சுதந்திரத்தை போதித்த ப்ரைடிஸத்தின் ஆடை துறந்த கலாசாரத்தின் சீரழிவுகளால் அனுதினமும் பல்லாயிரம் சீர்கேடுகள் உலகம் முழுதும் நடந்து வருகிறது.
இந்த வரிசையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பிள்ளை என்ற சீனாவின் குருட்டுச்சட்டத்தால் பெண் பிள்ளைகள் குறைந்து ஆண் பிள்ளைகள் தள்ளாடும் நிலை அங்கு உருவாகியுள்ளது. இதன் விளைவுகளில் ஒன்றே “சீனாவில் அதிகரித்து வரும் விலைமாதர்களும் விபச்சாரமும்“.
அதிகரித்த சனத்தொகையை கட்டுப்படுத்த சீனா எடுத்த அறிவீனமான முடிவால் இன்று அழிவை நோக்கி பயணிக்கிறது சீனா!
இஸ்லாம் கூறும் அழகிய வழி
“நீங்கள் வறுமைக்கு அஞ்சி உங்கள் பிள்ளைகளை கொன்று விடாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் உணவளிப்பவன் நானே!”
சிந்திக்குமா சீனா?
Post a Comment