ஷவ்வால் மாத தலைப்பிறை நாட்டின் பல இடங்களில் இன்று தென்பட்டுள்ளது. குறிப்பாக கிண்ணியா, புத்தளம் போன்ற பகுதிகளில் தென்பட்டுள்ளதோடு, மன்னாரில் ஜமாஅதுல் முஸ்லிமீன் அமைப்பைச் சார்ந்த சில அன்பர்களும் பிறையை கண்டுள்ளனர்.
கி்ண்ணியாவில் பிறை கண்ட தகவல் குறித்து அறிந்து கொள்ள பின்வரும் இணைப்பை கிளி்க் செய்யவும்.
தொடர்புகளுக்கு -
கிண்ணியா ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளிவாசல் இமாம் ரியாஸ் - 0775290014, எம்.நஈம் - 0774147651, எம்.ஜூஹர் தீன் - 0752641313
பிறைத்தகவலை பரைசாற்றிய ஸ்ரீ லங்கா தவ்ஹீ் ஜமாஅத்
மேற்படி பிறைத்தகவலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிறைக்குழு சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் நேரடியாக விசாரித்து அத்தகவல் உண்மையானது என்பதை உறுதி செய்ததோடு இந்நாட்டு ம்க்களுக்கு நாளைய தினம் பெருநாள் கொண்டாடப்பட வேண்டும் என்பதையும் அறிவித்துள்ளது. அதன் 48 கிளைகளிலும் பெருநாள் தொழுகை திடலில் நபி வழி அடிப்படையில் நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறைத்தகவலை ஏற்க மறுத்து நோன்பு நோற்கும் ஜம்இய்யதுல் உலமா சபை
பிறை கண்ட தகவல் சாட்சிகளுடன் எடுத்துச் சொல்லப்பட்ட போதிலும் போலியான காரணங்களை கூறி அலட்சியம் செய்தது ஜம்இய்யதுல் உலமா சபை. அவர்களது இறுதி அறிக்கை முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்டது. அதில் பத்வாக்குழு உறுப்பினர் பின்வருமாறு உலரினார்.
“கிண்ணியாவில் சில நல்லவர்கள் பிறை கண்டதாக சாட்சி கூறினார்கள். அவர்கள் பொய் சொல்லவில்லை. அவர்கள் பிறையை கண்டும் இருக்கலாம். ஆனால், அவர்கள் கண்ட பிறையின் அளவு குறித்து நுனுக்கமாக ஆராய தேவை இல்லாவிட்டாலும் சில காரணங்களுக்காக கேட்க வேண்டியுள்ளது. அவ்வாறு கேட்டதில் அவர்கள் கண்டதாக குறிப்பிடும் பிறையின் அளவை ஏற்க முடியாதுள்ளது.
ஆனால் இவர்கள் பொய் சொல்வதாக நாம் கூறவில்லை. இவர்கள் வேண்டுமானால் நாளை நோன்பை விடலாம். ஆனால் மக்களுடன் சேர்ந்து பெருநாளை கொண்டாட வேண்டும். பிறை குறித்த அறிவித்தலை அரச அதிகாரமிக்க ஒரு அமைப்பு தான் அறிவிக்க வேண்டும்.”
இது ஜம்இய்யதுல் உலமா விடுத்த ஊடக அறிக்கை. இவர்கள் எந்தளவுக்கு அரைவேக்காட்டுத்தனத்துடன் நடந்துள்ளனர் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.அத்துடன் இவர்களின் இத்தீர்மானத்திற்குப் பின்னால் ஈகோ பிரச்சினை இருப்பத தெளிவாக உணர முடிகிறது. இது கால வரை பெரிய பள்ளியினராகிய நாம் செய்து வந்த பிறை விடயத்தை நேற்று வந்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எப்படி கையில் எடுக்கலாம் என்பதே அவர்களுக்கு உள்ள ஒரே பிரச்சினை. சுய நலத்திற்ககாக மார்க்கத்தில் விளையாடும் உலமாக்களே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!
Post a Comment