எகிப்தில் என்ன நடக்கின்றது? எகிப்து ரானுவம் முர்ஸியை ஏன் கைது செய்தது அவரின் திட்டம் என்ன?
கீழே
குறிப்பிட்டுள்ள விடயங்கள் யாவும் பக்க சார்பில்லாத அரபு ஊடகங்களில் வெளிவருகின்ற
போதும் ஏனைய மொழி ஊடகங்களில் பக்க சார்பாகவே செய்திகள் வெளிவருகின்றன. மேலும்
அவர்களுக்கு இஹ்வான்களின் சில பிழையான
நடவடிகைகள் மறைக்கப்பட்ட்தாகவே இருக்கின்றன.
எகிப்து
ரானுவ ஆட்சியாளர்களின் குற்றச்சாட்டு இதுதான்.
இஸ்லாமிய
ஆட்சி பேசி, இஸ்ரேல் எதிர்ப்பு பேசி ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர்
அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் எகிப்து இக்வானுல் முஸ்லிமீனின்
ஜனாதிபதி ரகசியத் தொடர்புகளை வைத்துக் கொண்டிருந்தார்.
அந்த
இரகசிய திட்டம் என்ன?
பலஸ்தீன
காஸா முஸ்லீம்களை முற்றாக வெளியேற்றி, அவர்களை
எகிப்தின் ஸினாய் மலைப்பிரதேசத்தில் (ஸுரா
அத்தீனில் குறிப்பிடும் எகிப்துக்குச் சொந்தமான மலைப்பிரதேசம்) குடியேற்றும்
பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதற்கு
இஸ்ரேல் அமெரிக்கா மூலம் எகிப்த்துக்கு
கொடுக்கும் விலை 800 Billion அமெரிக்க டொலர்கள்.
இதற்கான
ஆவனம் ஒன்று எகிப்து ரானுவத்திடம் சிக்கியது,இதுவே
முர்ஸியின் பதவி கவிழ்ப்புக்கான காரனம் என்று எகிப்து இரானுவம் கூறுகின்றது.
இதன்
உண்மைத்தன்மையை அல்லாஹ்வும் சம்மந்தப்பட்டவர்களுமே அறிவர். சில
வேளை முர்ஸியை பதவி கவிழ்ப்புக்கான இஸ்ரேல் அமெரிக்க
கூட்டு சதித்திட்டமாகவும் இருக்கலாம். மேலும்
இதன் உண்மை தன்மையை நாம் கள நிலவரங்களை பார்த்தே புரிந்து கொள்ளலாம்..
- அரபு உலகில் முஸ்லீம்கள் கொல்லப்படும் போது எதிப்பு தெரிவித்த சவூதி மன்னர் அப்துல்லாஹ் ஏன் எகிப்து ரானுவ ஆட்சியாளர்களை ஆதரிக்கின்றார்.
- சவூதி
அமெரிக்காவுக்கு சார்பான கருத்துக்களையே தெரிவிக்கும் நிலையில் எகிப்து விடயத்தில் மட்டும் மாற்றுக்கருத்து
தெரிவிப்பதற்கான காரணம், சவூதி எதிர்நோக்கும்
பின் விளைவுகள் என்ன?
- ஏன் கத்தார் தவிர்ந்த
ஏனய மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து ரானுவ ஆட்சியாளர்களை ஆதரிக்கின்றனர்?
- முர்ஸி ஏன் மெளனம், அவரது கைதுக்கான காரணத்தை அவர் ஏற்றுக்கொண்டாரா?
மேலே
குறிப்பிட்டுள்ள சந்தேககங்களுக்கு தெளிவை சற்று நோக்கினால் உண்மையை
விளங்கிக்கொள்ளலாம்.
சவூதி
எகிப்து இரானுவத்தை ஆதரிப்பதன் நோக்கம்
சவூதி
மன்னர் அப்துல்லாஹ் மக்காவுக்கும் மதீனாவுக்கும் பாதுகாப்பதற்காக இருப்பவர்
மஸ்ஜிதுல் அக்ஸாவையும் காப்பாற்றி மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ஆதிக்கத்தையும்
கட்டுப்படுத்த வேண்டி எகிப்து ரானுவ ஆட்சியாளர்களை ஆதரிக்கின்றார்.
இஸ்ரேலுக்கு
பலஸ்தீன காஸா பிரதேசம் வழங்கப்பட்டால் இஸ்ரேல் சவுதிக்கு மிக அன்மையில்
வந்துவிடும்.
இன்னும்
முர்ஸியின் இந்த ஒப்பத்தை நிறைவேற்றினால் இஸ்ரேல் தனது இரண்டு பெரிய இலட்சியங்களை
மிக இலகவாக அடைய முடிகிறது.
1- இஸ்ரேலை
எதிர்த்துப் போராடும் பலஸ்தீன போராளிகள் பலஸ்தீனில் வெகுவாகக் குறைவதால், முழுப்
பலஸ்தீனையும் இஸ்ரேல் மிக இலகுவாகக் கைப்பற்றிக் கொள்ள முடியும்.
2- சினாய்ப் மலைப்பகுதியில் இருந்து அந்த பலஸ்தீன் போராளிகள்
இஸ்ரேலைத் தாக்கும் போது, “எகிப்து இஸ்ரேலைத் தாக்குகின்றது. எனவே இஸ்ரேல் தன்னைப்
பாதுகாத்துக்கொள்வதற்கு தற்காப்பு யுத்தம் நடத்துகிறது” என்ற
போர்வையில் எகிப்தைக் கைப்பற்றும் மாபெரும் யுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பிக்கும். “தற்பாதுகாப்பு
யுத்தம்” என்பதால் ஐரோப்பிய யூத கிறிஸ்தவ சக்திகள் அனைத்தும் ஐ.நா.
வில் சட்டமியற்றி இஸ்ரேலுக்கு முழுமையான ஆயுத உதவியை சட்டபூர்வமாகவே வழங்கும்.
பின்
எகிப்து முழுமையாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். இதுதான் இஸ்ரேலின் “அகன்ற
இஸ்ரேல்” அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற அது கையாளும் உத்தி.
இஸ்ரேலின்
இந்த சதித் திட்டத்துக்கு “குர்ஆன் ஹதீஸ்” பேசும்
இக்வானுல் முஸ்லிமீன் அரசு உதவத் தயார் நிலையில்
இருக்கின்றது.
இக்வானுல்
முஸ்லிமீன் அரசு பலஸ்தீனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எடுக்கும் முற்சி வரவேற்கத்
தக்கது.
ஆனால்
அந்த திட்டத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயமான ”பலஸ்தீன
காஸா முஸ்லீம்களை முற்றாக வெளியேற்றி, அவர்களை
எகிப்தின் சினாய்ப் பகுதியில் குடியேற்றுதல்” இவ்வளவு
பாதிப்பு வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் இதனால்
தானோ பலஸ்தீன் தூதுவர் முர்ஸியின்
ஆட்சியை பலஸ்தீன் எதிர்க்கின்றது, முர்ஸியின்
பயங்கரவாதத்தை அடக்கும் எகிப்து அரசாங்கத்துக்கு எதிராக வெளிநாடுகள் தலையிடக்
கூடாது என்றும், இக்வானுல் முஸ்லிமீன் பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும்
என்றும் எகிப்தில் உள்ள பலஸ்தீன் தூதுவர் குறிப்பிடுகிறார்?
துபாய்
பொலிஸ் அதிபர் கல்பான் பயங்கரவாதத்துக்கு எதிராக எகிப்து
மக்கள் நடாத்தும் போராட்டத்தில் இக்வான்களின் பயங்கரவாதத்தை முறியடிக்க எமிரேட்ஸ், ஸவூதி, குவைத்.
ஜோர்தான் ஆகிய நாடுகள் பூரண உதவி செய்வது போன்று அனைத்து நாடுகளும் எகிப்து மக்கள்
பக்கம் நிற்பது அவசியமாகும் என்று துபாய் பொலிஸ் அதிபர் கல்பான் அவர்கள்
குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், குறிப்பாக
எகிப்திலும் பொதுவாக அரபுலகத்திலும் அமைதியைக் குலைத்து பாதகாப்புக்கு பங்கம்
விளைவிப்பதற்காகவே ’அல் ஜஸீரா’ செய்தி
ஊடகம் நிர்மாணிக்கப்பட்டது என்றார்.
எகிப்தில்
முர்ஸியின் ஆதரவாளர்களின் பயங்கரவாதம் மடக்கப்பட்டு எகிப்தில் அரசியல் ஸ்திரம்
ஏற்பட வேண்டும் என்கிறார் லிபியப் பிரதமர்.
இக்வானுல்
முஸ்லிம்களால் எகிப்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நாட்டை அழிக்கும்
பயங்கரவாதத்தை எகிப்து அரசாங்கம் முறியடித்து நாட்டின் பாதகாப்பையும் அமைதியையும்
நிலை நாட்டுவது அரபு இஸ்லாமிய நாடுகளின் மிக மக்கிய அடிப்படைத் தேவையாகும்.
பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டும் என்ற எகிப்து மக்களின் தேவையை நிலைநாட்டுவது
அரசின் கடமையாகும். இதில் இக்வானுல் முஸ்லிமீன்களுக்கு ஆதரவாக
எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் தலையிடக்கூடாது என்கிறார் ஜோர்தான் வெளியுறவு
அமைச்சர் நாஸிர் ஜூதா.
மேலே
குறிப்பிட்ட நாடுகள் எதற்காக எகிப்து இரானுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள்
என்றால் அவை எகிப்த்துக்கும் இஸ்ரேலுக்கும்
அருகில் தமது எல்லைகளை வைத்துள்ள நாடுகள், சில
வேலை முர்ஸி ஆட்சியில் இருந்து அவர்களது திட்டம் நிறைவேரினால் தமது நாடுகளுக்கு
இஸ்ரேலின் அச்சுருத்தல் இன்னும் அதிகமாகும் என்றே கருதுகின்றனர்.
எகிப்த்தின்
தற்போதைய கள நிலவரம் வேலியே புல்லை மேய்கின்ற நிலை இவற்றையெல்லாம்
தடுக்க அல்லாஹ் போதுமானவன்.
உலகத்தலைவர்களின்
முடிவில் அப்பாவி மக்களே அதிகம் பலியாகின்றனர். அதிலும்
அல்லாஹ்வை மட்டும் வணங்கும் எமது முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் உள்ள கருத்து
வேறுபாடு காரணமாக நாளாந்தம் நூற்றுக்கணக்கில் நாம் எம் சகோதரர்களை இழந்து
கொண்டிருக்கின்றோம்.
முஸ்லிம்
நாடுகளிலும் எமது முஸ்லிம்களுக்கு மத்தியிலும் இஸ்லாம் எதிர்பார்க்கின்ற அமைதியை
வேண்டி எல்லாம்
வள்ள அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக.
Zaid Mohamed
Post a Comment