பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசாங்கத் தணிக்கை முடிவுகள் சென்ற 16-ம் தேதி வெளியிடப்பட்டன. அதில் முந்தைய அரசாங்கத்தினால் தொடர்ந்து மூன்று வருடங்களுக்குப் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட 141.மில்லியன் டாலர் தொகையானது முறையற்ற வழியில் செலவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இந்த ஊழல் சம்பவத்தில் பிரபலமான பெண் தொழிலதிபர் ஒருவர் ஈடுபட்டிருந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் அவர் இந்தப் பணத்தைப் பெற்றுள்ளார். இதுகுறித்த தகவல்கள் வெளிவந்தவுடன் அவர் காணாமல் போய்விட்டார் என்று கூறப்படுகின்றது.
97 மில்லியன் மக்கள்தொகை கொண்ட அந்த நாட்டில் 28 சதவிகிதத்தினர் அரசுக்கு முறையாக வரி செலுத்திக்கொண்டு தினசரி ஒரு டாலருக்குண்டான தொகையில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பெண் தொழிலதிபரின் ஆடம்பரமான வாழ்க்கையைப் பற்றி வெளிவந்த தகவல்கள் பொதுமக்களுக்கு ஆத்திரமூட்டும் விதத்தில் அமைந்தது.
இதுவே இன்றைய போராட்டத்திற்கான அழைப்பாக இருந்தது. ரிசால் பூங்காவில் இன்றைய போராட்டத்தில் மாணவர்கள் முதல் அனைத்துப் பிரிவிலும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காவல்துறையினரின் அறிவிப்பில் 70,000 பேர் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டிருந்தது. அங்கு கூடியிருந்த மக்கள், ஆட்சியில் இருந்தோர் தங்களுடைய தொகுதியில் நடைபெற்ற திட்டங்களுக்கு ஒதுக்கிக்கொண்ட ஊழல் பணத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் பிற நகரங்களிலும், நியுயார்க் மற்றும் பிலிப்பைன் மக்கள் வசித்துவந்த மற்ற நகரங்களிலும் இதே போன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
Post a Comment