இலங்கையில் 140000 பேர் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் தொழிலாளிகள் மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவுகளின் மூலம் இவ்வாறு தனிப்பட்ட நபர்கள் பாலுறவு கொள்வதாக சுகாதார அமைச்சின் பால்நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எயிட்ஸ் நோய்த் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஊடாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை 20 வீதமாக உயர்வடைந்துள்ளது.
முன்னைய ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கை 100 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
விரும்பத்தகாத பாலுறவுகளைத் தவிர்ப்பதன் மூலம் பாலியல் நோய்களைத் தவிர்க்க முடியும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment