எகிப்து அதிபர் மொர்ஸி பதவிவிலக எதிர்ப்பாளர்கள் 'காலக்கெடு'





எகிப்தில் அதிபர் மொஹமட் மொர்ஸி பதவி விலகுவதற்கு எதிரணிப் போராட்டக்காரர்கள் நாளை செவ்வாய்க்கிமை வரை காலக்கெடு விதித்துள்ளனர். தமது கோரிக்கைக்கு ஆதரவாக 22 மில்லியன் பேரின் (2 கோடி- 20 லட்சம் பேர்) கையொப்பம் திரட்டப்பட்டுள்ளதாக எதிரணி இயக்கமொன்று அறிவித்துள்ளது.
'மொர்ஸி பதவி விலகி தேர்தல் நடக்க இடமளிக்காவிட்டால் அவர் பொதுமக்களின் ஒத்துழையாமை போராட்டத்துக்கு முகம்கொடுக்க நேரிடும்' என்று தமாருட் (கிளர்ச்சி) என்ற இயக்கம் தெரிவித்துள்ளது.
தலைநகர் கெய்ரோவில், தாஹ்ரீர் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடியுள்ளனர். அதிபர் மாளிகைக்கு முன்பாகவும் போராட்டக்காரர்கள் குவிந்துவருகின்றனர்.பதவிவிலகக் கோரி நேற்றிரவு நாடுதழுவிய போராட்டங்கள் நடந்துள்ளன. ஆங்காங்கே வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன.
2011-ம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பின்னர் நடந்துள்ள மிகப்பெரிய போராட்டமாக இது பார்க்கப்படுகிறது.
அதிபர் மொர்ஸியின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் கெய்ரோ தலைமையகத்தில் நடந்த மோல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்ற இடங்களில் மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர்.
ஓராண்டுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த இஸ்லாமியவாத அதிபர் மொர்ஸி, பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் பாதுகாப்புப் பிரச்சனைகளிலிருந்தும் நாட்டைக் காப்பாற்றத் தவறிவருவதாக இலட்சக் கணக்கான போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, அதிபர் மொர்ஸியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் நஸ்ர் நகரின் புறநகர்ப் பகுதியில் பேரணிகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger