நேரம் மாறி வேலை செய்வதற்கும் மகப்பேறு பிரச்சனைகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
சவுதாம்ப்டன் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சீரற்ற முறையில் வேலை செய்பவர்கள் அதாவது அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரப் பணி செய்யும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் 80 சதவீதம் கூடுதல் காலம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதை சப்-பெர்ட்டிலிட்டி என்று சொல்கிறார்கள்.
இரவுப் பணி மட்டுமே செய்து வந்த பெண்களில் 29 சதவீதத்தினர் வரை கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதே போல பகல் இரவு என்று மாறி மாறி வேலை செய்யும் பெண்களில் 22 சதவீதம் பேருக்கு மாதவிடாய் பிரச்சனைகள் இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
வேலைப் பளுவுக்கும் இனப்பெருக்கத்துக்கும் இடையேயான தொடர்பு குறித்து ஒரு லட்சத்து இருபதாயிரம் பெண்களிடம் இ்ந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது
Post a Comment