ஷரிஆ சட்டங்கள் பற்றி எமது நாட்டில் உள்ள சகலரும் நிறைய தெரிந்து கொள்ளல் வேண்டும்: கலாநிதி வீரமந்திரி



சர்வதேச நீதிபதிகளின் உப தலைவரும், சட்ட மேதையும், உலக நாடுகளின் உள்ள சர்வதேச பல்கலைக்கழகங்களின் வருகை சட்ட விரிவுரையாளரும் 50க்கும் மேற்பட்ட சட்ட நூல்களை எழுதியவருமான நீதியரசர் சீ.ஜீ.வீரமந்திரி அவர்களால் சர்வதேச பார்வையில்இஸ்லாமிய சட்டவியல் ஆங்கில மொழி முலமான நூலின் சிங்களமொழி மொழிபெயர்ப்பு நூல் நேற்று பி.எம். ஜ.சி. எச் இல் வைத்து வெளியீட்டு வைக்கப்பட்டது.
இவ் வெளியீடு ஸ்ரீ லங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் அனுசரனையில் நடைபெற்றது. நீதியரசர் சி.ஜீ. வீரமந்திரியினால் Islamic Jurisprudence -  International Perspective என்ற நூலை முன்னாள் குவைத்நாட்டின் தூதுவராக கடமையாற்றிய எஸ்.ஏ.சி.எம் சுகையில் சிங்கள மொழி முலம் மொழிபெயர்ப்புச் செய்திருந்தார்.
இவ் வைபவம் வெளிநாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் எச்.எம். ஜி.எஸ் பள்ளியக்கார தலைமையில் நடைபெற்றது.
வரவேற்புரையை என்.எம் அமீன், நீதியரசர் வீரமந்திரி, ஜாமிஆ நளிமியா கலாபீட பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, சட்டமா அதிபர்  சரத் பாளித்த பெர்ணான்டோ, நூலின் மொழி பெயர்ப்பாளர் எஸ்.எ.சி.எம் சுகையில் நூல்பற்றிய ஆய்வினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியை சாவித்திரி குணசேகர ஆகியோரும் உரைநிகழ்த்தினார்கள்.
இங்கு உரையாற்றிய நீதியரசர் வீரமந்திரி –
இஸ்லாம் ஒரு சீரிய வாழ்க்கை முறையாகும். இம் முறைகளை கட்டாயம் வளர்ந்து வரும் மாணவ சமுகம் சட்ட மாணவர்கள், கல்விச் சமுகம். ஏனையோரும் இஸ்லாமிய கலை பாண்பாட்டு நீதி, சட்டம், முஹம்மத் நபி அவர்களின் சீராண வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதே போன்று தற்காலத்தில் இலங்கையில் மிகவும் தேவைப்படானதொரு கால கட்டத்தில் இந்த இஸ்லாமிய சட்டவியல் சிங்களமொழி முலமான நூல் வெளிவந்துள்ளது. அதே போன்று முஸ்லீம்களும் ஏனைய மதங்களின் வாழ்க்கை முறைகள் கலை பண்பாட்டு மதங்களை தெரிந்து கொள்ளல் வேண்டும்.
முஹம்மத நபி (ஸல்) அவர்கள் சீனதேசம் சென்றாலும் சீர்கல்வியைத் தேடி கற்கவேண்டும் என சொல்லியிருக்கின்றார். இஸ்லாமிய கற்கை சம்பந்தமான 800க்கும் அதிகமான (பகுதிகள் வலியும்) கொண்ட நூல்கள் உலக நாடுகளின் நூலகங்களில் உள்ளன. லண்டன் ஒகஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கூட 200 வலியும் கொண்ட நூலகமே உள்ளது. ஆகவே இஸ்லாம் பற்றிய பாரிய அறிவு விருத்திகளுக்கு இந் நூல்களை நாம் தேடி கற்றுக்கொள்ள வேண்டும்.
எனது ஆங்கில மொழி முலமான நூலை சர்வதேச சட்ட மாணவர்கள் கற்கின்றார்கள் ஆனால் இலங்கையில் உள்ள சட்டம், மற்றும் பல்கலைக்கழகம் பயிலுகின்ற மாணவர்களுக்கு 2 வீதமே முஸ்லிம் சட்டம் பற்றிய அறிவு போதிக்கப்படுகின்றன . ஆனால் இஸ்லாம் மற்றும் ஷரிஆ சட்டங்கள் பற்றி எமது நாட்டில் உள்ள சகலரும் நிறைய தெரிந்து கொள்ளல் வேண்டும். என நிதியரசர் வீரமந்திரி தெரிவித்தார்
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger