வடக்கு தேர்தல் களத்தில் முன்னாள் போராளிகளை நிறுத்தும் மஹிந்த அரசாங்கத்தின் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக மூத்த தளபதிகள் ராம் மற்றும் நகுலன் ஆகிய இருவரும் களமிறங்கவுள்ளனர். அதற்கு ஏதுவாக இதுவரை சத்தமின்றி எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றிய தகவல்கள் கூட இல்லாதிருந்த இவர்கள் இருவரும் இன்றிரவு பொலநறுவை சேனைக்குடியிருப்பு புனர்வாழ்வு முகாமிற்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்களிற்கு சுமார் ஒரு மாத கால புனர்வாழ்வினை அளிக்கவே கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நகுலன் யாழ்ப்பாணம் நீர்வேலியில் திருமண பந்தத்தில் இணைந்திருந்தார்.எனினும் அவர் விடுவிக்கப்பட்டிருந்த முறைமை கேள்விக்குள்ளாகி இருந்ததுடன் சரணடைந்த ஏனைய போராளிகள் நிலை தொடர்பான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருமிருந்தது. இதையடுத்தே அவசர அவசரமாக இவர்கள் இருவரும் தற்போது இன்றிரவு பொலநறுவை சேனைக்குடியிருப்பு புனர்வாழ்வு முகாமிற்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே புனர்வாழ்விலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழினி தேர்தலில் போட்டியிட மறுத்துவருவதாகவும் எனினும் தயா மாஸ்டர் போன்றவர்களிற்கு பிரச்சாரங்களை மேற்கொள்ள சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது ராம் மற்றும் நகுலனும் புனர்வாழ்வின் பின்னர் வேட்பாளராகவோ பிரச்சாரத்திற்காகவோ வெளி வரலாமென எதிர் பார்க்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் புலிகளது தலைமையை தாங்களே பொறுப்பேற்கப்போவதாக இவர்களிருவரும் கூறி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment