எகிப்தின் ஜனாதிபதி முர்சியை பதவி கவிழ்த்த முறை பிக்ஹ் சட்டக்கலை விதியான “இரண்டு தீமைகளில் குறைந்த தீமையை தேர்வு செய்வது” என்ற அடிப்படையில் அமைந்ததாகும்.
இந்த பிக்ஹ் சட்ட விதி அடிப்படையிலேயே முர்சியை பதவி விலக கோரும் சபையில் அல் அஸ்ஹர் பலகலைகழக வேந்தர் ஷைஹுள் அஸ்ஹர் அவர்கள் கலந்து கொண்டார்.
தற்போது எகிப்தில் ஏற்பட்ட பிரச்சினை கிலாபா பிரச்சினையோ ஷரீஆ பிரச்சினை அல்ல மாறாக அது உலக விவகார பிரச்சினை ஆகும்.எனவே அனைத்து தரப்பும் இந்த ரமலான் மாதத்தில் அணைத்து கட்சிகளும் தரப்புகளும் உள்ளடங்கிய ஒரு தேசிய அரசை உருவாக்கும் முகமாக நல்லிணக்க பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்.
முர்சியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்படும் வன்முறை பெரும்பாவத்தில் உள்ள ஹராமான ஒன்றாகும்.இது வன்முறை ஆகும்.இது கொலை குற்றத்துக்கும் ரெத்தம் சிந்தவும் வழிவகுப்பதாகும்.
இஸ்லாம் ரெத்தம் சிந்துவதையும் கொலை செய்வதையும் மறுக்கின்ற மார்க்கமாகும்.இஸ்லாம் மனித ரெத்ததிட்கு மதிபளிக்கிறது. கஅபாவை உடைக்கும் பாவத்தைவிட முஸ்லிமின் ரெத்தம் ஓட்டுவது மிகப்பெரிய பாவம் என இஸ்லாம் கூறுகிறது
தற்போது எகிப்தில் நடக்கும் போராட்டம் பதவிக்கான போராட்டமாகும்.பதவிக்காக போராடுவது பித்னா எனும் குழப்பம் ஆகும்.இஸ்லாம் இப்படியான பதவிக்காக சண்டை இடும் வழிமுறையை மருத்துத்து நிற்கிறது.அழியக்கூடிய உலக அட்பதுக்காக பதவிக்காக சண்டை இடுவது குழப்பம் என்று அல் குர்ஆன் போதிக்கிறது.கொலை செய்வதைவிட குழப்பம் செய்வது பெரும்பாவம் என்று அல் குர்ஆன் தெட்டத்தெளிவாக கூறுகிறது.குழப்பம் மிகப்பெரும் அழிவையும் படுமோசமான சூழலையுமே ஏற்படுத்தும்.
முர்சியின் பதவிக்காக போராட்டம் நடத்துவது கூடும் என்று சிலர் பத்வா கொடுத்திருப்பது தவறானது.முஸ்லிமும் முஸ்லிமும் எப்படி போராட்டம் நடத்துவது? ஆட்சிக்காக காபிர்களுடன் மாத்திரமே முஸ்லிம்கள் சண்டை இடமுடியும்.முஸ்லிம்கள் தங்களுக்குள் போர் தொடுக்க முடியாது.
“ஷர்குள் அவ்சத்” எனும் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியிலேயே முப்தி கலாநிதி பரீத் நஸ்ர் வாசில் அவர்கள் இதை குறிப்பிட்டுள்ளார்கள்.
Post a Comment