இலங்கையில் மாடு வெட்டுதலுக்கு விரைவில் தடை-
இலங்கையில் மாடு வெட்டும் நடவடிக்கையை தடை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவில் எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிஹல ராவய அமைப்புக்கு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் மாடு வெட்டும் நடவடிக்கையை தடை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவில் எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிஹல ராவய அமைப்புக்கு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாடு வெட்டுவதை தடைசெய்ய வலியுறுத்தி கதிர்காமத்தில் இருந்து கொழும்பு வரை பாதயாத்திரையாக வந்த சிஹல ராவய அமைப்பின் அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் ஜனாதிபதியிடம் இது தொடர்பில் மகஜர் ஒன்றைக் கையளித்திருந்தார்.
இதன்போது அவர் இலங்கையில் மாடு வெட்டுவதை தடைசெய்யும் படியும், உடனடியாக வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கையெடுக்கும்படியும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடமத்திய, மத்திய மாகாண சபைகளின் 12 முன்னாள் உறுப்பினர்கள் போட்டியிட முடியாது-
வட மத்திய மற்றும் மத்திய மாகாண சபைகளின் 12 முன்னாள் உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவிக்கப்படுகிறது, 12 முன்னாள் உறுப்பினர்களுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிடக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்காது என ஜனாதிபதி விசாரணைப்பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விலை மனுக்கோரல், லஞ்ச ஊழல் மோசடி, குற்றச்செயல்கள், தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய காரணத்தினால் இவர்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் பணிப் பகிஸ்கரிப்பு-
நாளை நள்ளிரவு தொடக்கம் 48 மணித்தியாலங்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இந்த பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படும் என ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்துடன் தொடர்புடைய 11 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஸ்கரிப்பில் பங்கேற்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தமது பிரச்சினைகள் தொடர்பில் நேற்று அதிகாரிகளுடன் மூன்று மணிநேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதற்கு முன்னரும் பல தடவைகள் பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப் போவதாக ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்த போதும் பின்னர் அவற்றை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment