புகை பிடிக்காதீங்க… ஆண்மை குறையும்… பேசி அட்வைஸ் செய்யும் சிகரெட் பாக்கெட்டுகள் / 12 ஆபிரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவு

 on 4 July 2013 

 
புகை பிடிக்காதீங்க… ஆண்மை குறையும்… பேசி அட்வைஸ் செய்யும் சிகரெட் பாக்கெட்டுகள்-
வாழ்த்து அட்டைகளை திறந்தால் ஹேப்பி பர்த்தே பாட்டுப் பாடுவதைப் போல இனி சிகரெட் பாக்கெட்டுகளைத் திறந்தால், ‘ஆண்மைகுறையும், சிகரெட் பிடிக்காதீங்க!.. என அட்வைஸ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் நோய்களால் அரசுகளுக்கும் பல்வேறு மறைமுக செலவினங்கள் ஏற்படுகின்றன. மருத்துவச் செலவு, சம்பந்தப்பட்டவரின் படிப்புக்காக செலவிடப்பட்ட தொகை என்று பல விதத்திலும் அரசுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட வலியுறுத்தி, டிவி, ரேடியோ, பத்திரிகைகள் ஆகியவற்றில் விளம்பரம் செய்யப்படுகிறது. பொது இடங்களில் புகை பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் புகைப்பவர்களை தடை செய்ய முடியவில்லை.
புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், ஆண்மைக் குறைவு, வாழ்நாள் குறைவது என்று பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும், சிகரெட் பிடிப்பவர்கள் அதை காதில் போட்டு கொள்வதே இல்லை.
இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தின் புகையிலை கட்டுப்பாடு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அறிவுரை சொல்லும் சிகரெட் பாக்கெட்டுகளை தயாரித்துள்ளனர்.
சிகரெட் பாக்கெட்டை திறந்தவுடன், ‘ஆண்மை குறைந்து விடும், புகை பிடிக்காதீர்கள்’ என்றும், சிகரெட் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகளை அறிவதற்கான தொலைபேசி எண்ணையும் குறிப்பிடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை தயாரித்த விஞ்ஞானிகள் கூறுகையில், ”புகைப்பிடிப்பதை கைவிட வலியுறுத்தும் விளம்பரங்களை கூட, சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் மிக அழகாக தங்கள் பாக்கெட்டில் அச்சடித்து அதை ஒன்றும் இல்லாதது போன்று ஆக்கி விடுகின்றன. இதேபோல் சிகரெட் பாக்கெட்டையும் மிக அழகாக தயாரிக்கின்றனர்.
வரும் காலத்தில் பாட்டு பாடும், மியூசிக் ஒலிக்கும் சிகரெட் பெட்டிகள் வரலாம். அதற்கு முன்னதாக அந்த தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்” என்றனர்.
பேசும் பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளில், அதை திறந்தவுடன், ‘ஹேப்பி பெர்த்டே…’ பாட்டு பாடும். அதே தொழில்நுட்பம் தான் இந்த சிகரெட் பாக்கெட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய சிகரெட் பாக்கெட்டை, இளம் பெண்கள் மற்றும் ஆண்களிடம் கொடுத்து கருத்து கேட்டபோது, இது சிகரெட் பழக்கத்தை கைவிடும் விதத்தில் தங்கள் சிந்தனையை தூண்டுகிறது என்று கூறியுள்ளனர்.
ஸ்காட்லாந்தில் இந்த பேசும் சிகரெட்டுகளைப் பயன்படுத்தி புகைப்பவர்களின் எண்ணிக்கையை 23 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதெல்லாம் சரிதான் நம்ம நாட்டில் இதை அறிமுகப்படுத்தினால் இதைக் கேட்டு எத்தனை பேர் சிகரெட் பிடிப்பதை விட்டு விடுவார்கள் என்று தெரியலையே?.
12 ஆபிரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவு-
வெளிநாட்டுக் கொள்கையை மீளுருவாக்குதலின் ஓர் அம்சமாக ஆபிரிக்காவில் மேலும் பன்னிரண்டு நாடுகளுடன் இலங்கை இராதந்திர உறவுகளை தொடங்கவுள்ளதென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை, ஏற்கெனவே 34 ஆபிரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை கொண்டுள்ளது. அண்மையில் இலங்கை நைஜீரியா, உகண்டா ஆகிய நாடுகளின் தலைநகரங்களில் வதிவிட பிரதிநிதித்துவ இல்லங்களை அமைத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆபிரிக்கா நாடுகள் பிராந்திய அடிப்படையில் இணைந்து ஒரு பொதுச்சந்தையை உருவாக்கவுள்ளன. இந்த சந்தையை இலங்கை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த பிரசாரத்தில் கென்யா, தன்சான்யா, உகண்டா மற்றும் ருவண்டா ஆகிய நாடுகளும் உள்ளன.
இவை தமது சுங்க முறைகளை இசைவாக்கம் செய்துள்ளன. இந்த நாடுகளுக்கு இரத்தினக்கல்,கராம்பு, ஏலம் மற்றும் தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ய முடியும்.
தன்ஸான்யாவிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்யலாம். அதற்கு மேலதிகமாக வங்கித்துறை,காப்புறுதி ஆகிய சேவைத்துறைகளிலும் ஒத்துழைப்பு இருக்கும்.
இந்த வருட இறுதிக்குள் ஸ்ரீலங்கன் விமான சேவை செசெஸிலிஸுக்கு தனது சேவைகளை தொடங்கவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger