-அபு றுகையா (அஸ்ஹரி)-
எகிப்திய அரசியலில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை தொடர்ந்து ஜனநாயக ரீதயில் இடம்பெற்ற முதலாவது சுயாதீன தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றவர் இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை சேர்ந்த கலாநிதி முஹம்மது முர்சி அவர்கள்.
தனது ஒருவருட ஆட்சியின் முடிவில் மீண்டுமொரு மக்கள் புரட்சியின் மூலம் இராணுவ உதவியுடன் பதவி கவிழ்க்கப்பட்டார். இந்த சந்தர்ப்பத்தில் ஆட்சி கவிழ்ப்புக்கான காரணங்களை விரிவாக ஆராய்வது பொருத்தம் என நினைக்கிறன்.
எகிப்தின் அரசியல் களம் என்பது சற்று விதியாசமானது, இஸ்லாமிய ஆட்சிமுறையை ஏட்படுத்துவதே நோக்காக கொண்ட ஒரு அணியும் அதற்கு முற்றிலும் எதிரான ஒரு அணியும் இங்கு காணப்படுகிறது. இஸ்லாமிய அணிகளை பொறுத்தவரையில் இஹ்வானுள் முஸ்லீமீன்களின் “சுதந்திற்கும் நீதிக்குமான” கட்சியும், சலபிகளின் “அந்நூர்” கட்சியும் பிரபல்யமானவை.
இவ்விரு இஸ்லாமிய கட்சிகளின் மக்கள் செல்வாக்கை பொறுத்தவரையில் சலபிகளின் அந்நூர் கட்சி முதல் நிலையிலும் இஹ்வானுள் முஸ்லீமீன்களின் அரசியல் கட்சி இரண்டாம் நிலையிலும் உள்ளது.
இந்த மக்கள் செல்வாக்கை நிர்ணயப்படுதிக்கொண்ட நிலையில் அதிபர் தேர்தலை சந்தித்த இஸ்லாமிய அணிகள் உள் நாட்டின் பொருளாதார, அரசியல் இஸ்த்தீரண தன்மை, மற்றும உலக அரசியல் ஒழுங்கு போன்றவற்றை கருத்தில் கொண்டு அதிபர் தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் பங்கு பெறுவதில்லை என்ற முடிவையே எடுத்திருந்தன.
இந்த வாக்குறுதியை முன்வைத்தே பாராளுமன்ற தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமீன்கள் கிறிஸ்த்தவர்களுடனும் மதச்சார்பற்றவர்களுடனும் கூட்டனியமைத்து ஆட்சியை கைப்பற்றினர்.
ஆனால் அதிபர் தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமீன்கள் இந்த வாக்குறுதியை காப்பாற்ற தவறியமை ஆட்சி கவிழ்புக்கான முதல் காரணியாக கருதமுடியும்.
இந்த தேர்தலில் ஏற்பட்ட முறுகல், அதனை தொடர்ந்து வந்த தோல்வி போன்றன மதசார்பற்றவர்களிடம் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. காரணம் அரபு வசந்ததின் மிக முக்கிய பங்காளிகள் இவர்கள் என்பதே.
இரண்டு பெரும் தவறுகளை இந்த இடத்தில் இக்வானுல் முஸ்லிமூன்கள் செய்திருந்தனர்.
ஒன்று நாடளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய இயக்கங்ளில் அதிகூடிய வாக்கு வங்கி கொண்டவர்கள் நாங்கள்தான் ஏனைய இஸ்லாமிய கட்சிகள் மக்கள் செல்வாக்கு கொண்டவை அல்ல. இஸ்லாமிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றுதல் என்பது சாத்திய குறைவானது என்று கருதினர்.
எனவே பொய்யான வாக்குறுதிகளை வழங்கி கிரிஸ்தவர்களுடனும் மதசார்பற்றவர்களுடனும் மார்க்கம் விரும்பாத தங்களின் கொள்கைக்கு முற்றிலும் தவறான பல விட்டுகொடுப்புகளை முன்வைத்து கூட்டணி அமைத்தனர்.
எந்தளவுக்கு என்றால் தங்களின் அரசியல் கட்சியின் பிரதித் தலைவராக ஒரு கிரிஸ்தவரை நியமிக்கும் அளவுக்கு இஹ்வான்களின் நிலை மாறிப்போயிருந்தது.
இரண்டாவது எந்த வாக்குறுதிகளை முன்வைத்து இஸ்லாமிய விரோதிகளின் வாக்குகளை பெற்றார்களோ அதை நிறைவேற்றத் தவறியமை.
அதில் பிரதானமானது சலபிகளின் கட்சியான அந்நூர் கட்சியின் செல்வாக்கை பாராளுமன்ற தேர்தலில் அறிந்து கொண்ட இஹ்வானுல் முஸ்லிமூன் சலபிகள் அதிபர் தேர்தலில் பங்கு கொள்ள மாட்டோம் என்ற வாக்குரிதை மிகச்செரியாக நிறைவேற்றுவாருகள் என்பதை கணித்திருந்தனர்.
எனவே நாடாளுமன்றத்தில் நடு நிலையாளர்களாக பரிணமித்தவர்கள் அதிபர் தேர்தலில் கிலாபாவை?நோக்கி கடும்போக்குகாளர்களாக பயணமானார்கள்.
அதிபர் தேர்தலின் பின்னரான இஹ்வானிய ஆட்சியின் நகர்வுகள் இஹ்வானிய தலைமையகத்தின் முழு நிகழ்சி நிரலுக்குள் மூல்கிப்போயிருந்தது.
காரணம் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களினதும் அவர்களது ஊடக ஒழுங்கு முறையின் எதிர் பாராத தாக்குதல்களினாலும், நாடாளுமன்றத்தை சட்டத்துறை அதிரடியாக தடை செய்ததும் இகஹ்வான்களை ஒரு கணம் அதிர வைத்து விட்டது.
இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு அரச கதிரையில் ஒய்யாரமாய் உட்கார வேண்டுமானால் மதச்சார்பற்றவர்களின் ஆதரவாளர்களாக மாறுவதை விட வேறு ஒரு வழி இஹ்வானிய உயர் பீடத்திதிடம் இருக்கவில்லை.
எனவே மாபெரும் இஸ்லாமிய சக்தி எகிப்தில் இருப்பதையும், தமது ஆட்சிக்கு ஆபத்தென்றால் தங்களோடு இஸ்லாமியர்கள் இணைந்து நிற்பார்கள் என்பதையும், தமது பயணம் கிலாபா நோக்கியது என்ற விடயங்கள் எல்லாவற்றையும் சீர்தூக்கிப்பார்க்க மறந்தே போனார்கள். மீண்டும் இஸ்லாத்தை கருவறுக்க நடு நிலையாளர்கள்? ஆனார்கள்.
இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு மீண்டும் மதச்சாற்பற்றவர்களின் மடி தேடியது இஹ்வான்களை இஸ்லாமியர்களுக்கு புடம் போட்டுக் காட்டிய மிகசிறந்த தருணங்கள்.
இதன் பின்னரான இவர்களது அரசியல் அணுகுமுறை, இஸ்லாமிய இயக்கங்களை பார்த்து இவர்களெல்லாம் இஸ்லாமிய இயக்கங்களா?? துரோகிகள் என்று எக்காரணதிற்காக விமர்சித்தார்களோ அது அத்தனையையும் அசிங்கப்படாமல் அரங்கேற்றும் தருணமாக இருந்தது. இன்னொரு முறையில் சொன்னால் தங்களை தாங்களே தூற்றிகொண்ட புத்திஜீவிகள் !!!!!!.
இரண்டாவது காரணம்
இவர்களின் இஸ்லாமிய கிலாபாவில் ?? மெய்சிலிர்க்க வைக்கும் சில சேவைகள்
(1) ஜனாதிபதியின் உதவியாளராக கிரிஸ்த்தவ பெண்ணை நியமித்தது.
(2) யாப்பு வரைபில் நாட்டின் இறைமை மக்களிடம் தான் இருக்க வேண்டும் என்று இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் எழுதமுனைந்த சந்தர்பத்தில் இஸ்லாமிய கட்சியான அந்நூர் மறுப்புத் தெரிவித்து அல்-அஸ்ஹர் பல்கலைகழக உயர்பீடத்திடம்தான் அந்த அதிகாரம் இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்த சந்தர்பத்தில் தனது லெபறல் தோழர்களை பகைத்துகொள்ளாமல் ஒதுங்கி நின்று இஸ்லாமிய பற்றை ?? வெளிப்படுத்தியது.
(3) சினிமா கூத்தாடிகளை உலமாக்கள் விமர்சித்தார்கள் என்ற காரனத்திற்காக உலமாக்களை சிறையில் அடைத்தது மட்டுமல்லாமல், சினிமா கூத்தாடிகள் மனமுடைந்து போய்விடக்கூடாது என்பதற்காக அவர்களை தேடிச்சென்று ஆறுதல் அளித்து, நீங்கள் சிறந்த சேவை செய்கிறீர்கள் அதை இன்னும் சிறப்பாக செய்யுங்கள் என்று விபச்சாரத்தை ஊக்குவித்த ஒரே இஸ்லாமிய தலைவர்?? (அந்த அறிஞர் இன்னும் சிறையில் இருக்கிறார் )
(4) சில காவல் துறை அதிகாரிகள் இஸ்லாமிய விழுமியங்களை பேணினார்கள் (தாடி வைத்திருந்தார்கள்) என்ற ஒரே காரணத்திட்காக (நீதிமன்றம் பணிக்கு அவர்களை மீளளைக்குமாறு தீர்ப்பு வழங்கியும் கூட) இஹ்வானிய கிலாபாவால் அவர்களை பணிக்கமர்த்த முடியவில்லை, காரணம் தனது இஸ்லாமிய விரோத தோழர்களை பகைத்து கொள்ள விரும்பாமை.
இஸ்லாமிய பாதையில் பயனிக்கிரார்கள் என்ற விமர்சனம் வந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள்.
(5) அமைச்சரவையை அமைப்பதற்கான கூட்டங்களில் இஸ்லாமிய கட்சிகளுக்கு உரிய அந்தஸ்து வழங்காமல் புறக்கணித்து கிரிஸ்த்துவர்களையும் மதச்சாற்பற்றவர்களையும் கொண்டாடினார்கள். தங்களின் இயக்கம் சார்ந்தவர்களுக்கு மட்டும் தாராள தன்மை வழங்கினார்கள்.
புரட்சிக்கு பின்னரான ஒரு ஆட்சி எதை செய்யுமோ அதை முற்றாக மறந்தனர், 80 வருடமாக அரசியலுக்கென்றே தங்களை தயார் செய்த பேரியக்கம்.
அதுதான் 30 வருட முபாரக்கின் சர்வாதிகார ஆட்சின் எச்சங்கள் நாட்டின் எல்லா துறைகளிலும் வியாபித்திருந்தார்கள். அவர்களைகளை பிடுங்கும் அந்த வேலையை துப்பரவாக மறந்துபோனர். இது தான் இவர்கள் செய்த மூன்றாவதும் மிக முக்கியமான தவறும் ஆகும்.
இதை செய்யாமல் விட்டதற்கான காரணங்கள் என்ன வென்று பாப்போம்.
இஸ்லாமிய வாதிகளின் ஒட்டு மொத்த ஆதரவோடு ஆட்சிபீடம் ஏறியவர்கள் எதிர் தரப்பின் அதிரடியால் அதிகார கதிரை ஆட்டம் காணுவதாக நினைத்து, இஸ்லாமிய எதிர்ப்பாளர்களோடு ஒன்றிப்போயிருந்தமை இஸ்லாமிய தரப்பின் ஆதங்கத்தை அதிகப்படுத்தியது என்பதை அரசியல் களம் மிகதெளிவாக இஹ்வானிய உயர்பீடத்திட்கு உணர்தியது.
எனவே தற்காலிகமாக அதிகாரத்தை தக்கவைத்தவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலின் வெற்றியே நிரந்தரமாக அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான முக்கிய சாதனம்.
இச்சந்தர்பத்தில் மதச்சார்பற்றவர்களையும், அவர்களின் ஊடக ஒழுங்கையும் பகைத்துக்கொள்ள இஹ்வானிய அரசுக்கு தைரியம் இருக்க வில்லை. இந்த இகஹ்வானிய இயலாமையினால் முபாரக்கின் எச்சங்கள் பாதுகாக்கப்பட்டனர்.
எக்காரணங்கள் முபாரக்கின் எச்சங்களை பாதுகாத்ததோ அதே காரணம் சில முபாரக்கின் எச்சங்களை பதவி நீக்கவும் செய்தது. அதுதான் இஹ்வானிய அரசை பாதுகாத்தல்.
ஒரு புறம் இப்படி மதசார்பற்றவர்களுடனான நெருக்கத்தை அதிகரிக்க இஹ்வானிய அரசு பெரிய பிரயத்தனங்களை செய்தாலும் முபாரக்கின் எச்சங்களும், மதச்சார்பற்றவர்களும் இகஹ்வானை அணைக்க விரும்பவில்லை. (அவர்களின் கொள்கையில் அவர்கள் மிகச்சரியாக இருந்தார்கள்) மறு புறம் இஹ்வானிய இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் இஸ்லாமிய வாதிகளை வெறுப்படைய வைத்தது.
இப்படி இருதரப்பினரின் ஆதரவும் குறைவதை உணர்ந்த இஹ்வானிய அரசு எதிர் வரும் நாடளுமன்ற தேர்தலின் வெற்றிக்கான யுக்திகளை கையாளத் தொடங்கினர்.
நான் மேலே குறிப்பிட்டது போன்று இஹ்வான்களின் வாக்குப் பலமும் சலபிகளின் வாக்குப் பலமும் அரசியல் அரங்கில் நிர்ணயிக்கப் பட்ட ஒன்றாக இருந்தது.
எனவே எதிர் வரும் நாடளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் எப்படியாவது இஸ்லாமிய கட்சிகளை பலவீனப்டுதியாகவேண்டிய தேவை இஹ்வானிய உயர் பீடத்திற்கு இருந்தது.
இஹ்வான்கள் தங்களின் தூரோக முகங்களை காட்டத்தொடங்கினர். இஸ்லாமிய இயக்கங்களை பலவீனப்படுத்தும் அவர்களது வியூகங்களை நடை முறைபடுத்தும் படலங்களை ஆரம்பித்தனர்.
தொடரும்….
Post a Comment