ஆப்பிரிக்காவில் தெற்கு- சஹாரா பிராந்திய நாடுகளில் ஒருபால் உறவு வாழ்க்கை முறையை குற்றச் செயலாக அறிவிக்கும் போக்கு அதிகரித்துவருவதாக மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் எச்சரித்துள்ளது.
ஒருபால் உறவு வாழ்க்கை முறையைக் கொண்டவர்களை இலக்குவைத்து நடக்கும் தாக்குதல்கள் அறிவித்துவருவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
தெற்கு சூடானும் புருண்டியும் ஒருபால் உறவு வாழ்க்கை முறையை கொண்டவர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமான புதிய சட்டங்களை கொண்டுவந்துள்ளன.இந்த பாரபட்சத்துக்கு எதிராக அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் போராட வேண்டுமென்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் கோரியுள்ளது.
நைஜீரியாவும் லைபீரியாவும் உகாண்டாவும் ஏற்கனவே இருந்த தண்டனைகளை அதிகரித்து சட்டமியற்றியுள்ளதையும் அம்னஸ்டி இன்டர்நேஷனலின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தெற்கு- சஹாரா ஆப்பிரிக்க நாடுகள் பெரும்பாலும் அரபுலகின் பாகமாகவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment