உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள சீன ஜனாதிபதி சி ஜிங்பிங் கலிபோர்னியாவை சென்றடைந்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவுடனான கலந்துரையாடல்களில் ஈடுபடும் நோக்கில் சீன ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.
சீனாவின் ஜனாதிபதியாக சி ஜிங்பிங் நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் முதல் தடவையாக அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
உலகின் முக்கிய பொருளாதார நாடுகளாக விளங்கும் சீனாவும் அமெரிக்காவும் அடிக்கடி முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது விசேடமாக சைபர் தாக்குதல்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இராணுவ ஆதிக்கத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு சீனா பல்வேறு சவால்களை விடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment