முஸ்லிம் பெண்களின் புர்கா + நிகாப் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் - முஸம்மிலின் லங்காதீப கட்டுரையிலிருந்து


“இனங்களுக்கிடையில் வேற்றுமையை உண்டுபண்ணக்கூடிய, தேவைக்குதவாத சமூகத்தனித்துவத்தை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தும் ‘’ கோணிபில்லா ” ( புர்கா / நிகாப் ) முறை இந் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளதுடன் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் வீணான சந்தேகங்களை ஏற்படுத்தக் கூட்டியதுமாகும்”. என்று தேசிய விடுதலை முன்னணி ஊடக பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  எம் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

2013/06/30 ந் திகதி லங்காதீப பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ள கட்டுரையொன்றில் மேற்படி கருத்து கூறியுள்ள அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

 “ இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த முஸ்லிம்களின் கலாசாரமானது இந்து கலாசாரத்தை அடியொட்டிய முஸ்லிம் கலாசாரமாக இருந்துள்ளது. இந்நாட்டு முஸ்லிம்கள் விளக்கேற்றும் பழக்கத்தை கொண்டிருப்பதை இதற்கான உதாரணமாக சுட்டிக்காட்டலாம். சுமார் 700 வருட கால வாரலாற்றைகொண்ட இந் நாட்டின் முஸ்லிம்கள் ஆரம்ப காலம் தொட்டே இந்நாட்டின் சிங்கள பாரம்பரிய கலாசாரத்தை அடியோட்டியே தமது முஸ்லிம் கலாசார தனித்துவத்தை பேணி வந்துள்ளார்கள். இந்த கலாசார முறையானது சிங்கள முஸ்லிம் இன ஒற்றுமைக்கும் முன்னுதாரணமாக இருந்துள்ளது. இந் நிலைமை இலங்கை முஸ்லிம்களின் ஆடை விடயத்திலும் பிரதிபலித்துள்ளது.

 அக்கால முஸ்லிம்கள் தமது கலாசார உடையை அடையாளபடுத்த , சிங்கள மக்களின் கலாசார உடையில் முஸ்லிம் கலாசார அடையாளங்களை உட்படுத்தியுள்ளார்கள். அக்காலம் தொட்டே முஸ்லிம் பெண்கள் மத்தியில் “சாரி” அணியும் பழக்கம் பிரபலமாக இருந்துள்ளது. அந்த ஆடைமுறையால் இந்நாட்டு சிங்களசமூக கலாசாரத்துடன் ஒன்றிப்போக கூடிய சந்தர்பமும் கிடைத்தது. அதேவேளை முஸ்லிம்களின் தனித்துவத்தை அடையாளப்படுத்த சாரியின் ஒரு பகுதியால் தமது தலையையும் மறைத்துகொண்டார்கள். அதே போல் முஸ்லிம் யுவதிகளுக்கு மத்தியில் சல்வார் கமிஸ் மிக பிரபலமான ஆடையாக இருந்தது, அதன் முந்தானையால் தமது தலையை மூடுவதால் அவர்கள் இஸ்லாமிய தனித்துவத்தையும் பேணி வந்தார்கள்.

பிற்காலத்தில் 1980/90  களுக்கு பிறகு மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தொழில் வாய்ப்புகளால் இந் நாட்டு முஸ்லிம்களுக்கு மத்தியில் சவூதி அரேபிய ஆடை முறை தீவிரமாக பரவியது . பெண்களுக்கு மத்தியில் கருப்பு ஜுப்பா முறையும் ஆண்களுக்கு மத்தியில் வெள்ளை ஜுப்பா முறையும் ஆக்கிரமிப்பு பாணியில் மிகத்தீவிரமாக  அணுவணுவாக பின்பற்ற தொடங்கினார்கள். இந்த ஆடைமுறை நம் நாட்டில் பரவ ஆரம்பித்ததால் இன்று மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவே நான் கருதுகின்றேன். 

இனங்களுக்கு மத்தியிலோ சமயங்களுக்கு மத்தியிலோ பிளவுகளை வேற்றுமைகளை மேலோங்க செய்வதை விட ஒற்றுமையை வாளர்பதையே நாம் ஊக்குவிற்க வேண்டும். தற்காலத்தில் இந்நாட்டில் வாழும் மொத்த முஸ்லிம் சனத்தொகையில் இரண்டு அல்லது மூன்று சதவீதத்தினரால் பின்பற்றப்படும் இம் மத்திய கிழக்கு ஆடை முறையால் பெரும் பான்மை முஸ்லிம்களுக்கும் ஒரு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அனாவசியமான முறையில் ,தேவைக்கு அதிகமாக தமது தனித்துவத்தை வெளிக்காட்ட இவர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு பாணியிலான இவர்களின் செயற்பாடுகள் இந் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவும் உள்ளது.

இவர்கள் இஸ்லாத்தை சுட்டிக்காட்டி இந்த புர்காவை (கோணிபில்லா உடையை) வலியுறுத்துவ தற்காக முன்வைக்கும் பிரதான காரணம் “ஆண்களின் காமஇச்சையிலிருந்து பெண்களை பாதுகாப்பது” என்பதாகும். பெண்களின் முகத்தையும் கைகையும் கண்டதும் காமம் வெளிப்படுவது மன நோயாளிகளுக்கல்லாமல் சாதாரணமான மனிதர்களுக்கு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger