துருக்கி: ஆர்ப்பாட்டங்கள், மோதல்கள் நீடிப்பு



துருக்கியில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மூன்றாவது இரவாக மோதல்கள் நீடித்துள்ளன.
இஸ்தான்புல் நகரின் பெஸிக்தாஸ் வட்டகையில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகளை டஜன்கணக்கில் வீசியிருந்த பொலிசார், தண்ணீரையும் பீய்ச்சியடித்திருந்தனர்.

நீடித்துவரும் கலவரங்களில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பள்ளிவாசல்கள், பல்கலைக்கழகங்கள், கடைகள் போன்றவறை தற்காலிக சிகிச்சை கூடங்களாக மாறிவருகின்றன.தோண்டும் இயந்திரம் ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் ஓட்டி வந்தனர். ஆனால் பிரதமர் அலுவலகத்துக்கு அதை அவர்கள் ஓட்டிச் செல்வதைப் பொலிசார் தடுத்திருந்தனர்.
நாடெங்கிலுமாக பரவியுள்ள இந்தக் கொந்தளிப்பை ஒட்டி 1700 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் கூறினார்.
நாட்டின் பிரதமர் ரெஜெப் தையிப் எர்தொவான் பதவி விலக வேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger