இங்கிலாந்துக்கு வருகை தர பிணைப் பணம் – புதிய நடைமுறை நவம்பரில் ஆரம்பம்


இலங்கை உட்பட அதிக நிச்சயமற்ற தன்மை நிலவும் நாடுகளில் இருந்து இங்கிலாத்துக்குள் பிரவேசிக்கும் நபர்கள் மூவாயிரம் ஸ்டேர்லிங் பவுண்களை பிணைப்பணமாக செலுத்தவேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. குடியேற்ற துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த விதிமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.
இங்கிலாந்தின் உள்ளக விவகாரங்களுக்கான செயலாளர் தெரேசா மே அவர்களால் பரீட்சார்த்த ரீதியில் இந்த நடவடிக்கை இந்த ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த நடவடிக்கையில் ஆறு ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குள் வரும் நபர்கள் மீது இந்த பிணைப்பணம் அறவிடப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவை முன் மாதிரியாக கொண்டு செயற்படுத்தப்படவுள்ள இந்த நகர்வில் விசா காலப்பகுதிக்கு மேலதிகமாக தங்கியிருப்போர் இந்த பிணைப்பணத்தை இழக்க நேரிடும்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகள் இந்த புதிய விடுமுறையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குள் பிரவேசிப்போர் இந்த பினைப்பனத்தை சட்டவிரோத தங்கியிருத்தளுக்கு பிணையாக செலுத்த வேண்டும்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தெரேசா “எமது குடிவரவில் ஆட்களை கவனமாக தெரிவு செய்யும் நடவடிக்கையின் அடுத்த கட்டம் இதுவாகும். இந்த திட்டம் மூலம் எமது நிகர குடிவரவை இலட்சங்களில் இருந்து பத்தாயிரங்களுக்கு குறைக்க முடியும் அத்துடன் மிகவும் பொருத்தமானவர்களை இங்கிலாந்துக்கு வரவேற்க முட்யும்” என தெரிவித்தார்.
நீண்டகால நோக்கில் இந்த பிணை முறை மூலம் மேலதிகமாக தங்கியிருப்போர் எமது பொது சேவைகளை பாவிப்பதை தடுக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.
இங்கிலாந்தின் உள்ளூர் செயலகம் அதிகளவு வருகை விசாக்களை (Visit Visa) பெற்றுக்கொள்ளும் நாடுகளை இந்த முறை மூலம் இலக்குவைத்து ஏமாற்றுதல் மற்றும் துஷ்பிரயோகங்களை குறைக்க எண்ணியுள்ளது. (The Sun)

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger