அதிகார மாற்றம்: அரச குடும்பத்தை அவசரமாக கூட்டும் கத்தார் அமீர்


தற்போதைய கத்தாரின் அமீர் ஷேக் ஹாமத் பின் கலீபா அல் தானி அவர்கள் தனது  அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கத்தார் நாட்டின் முக்கிய சமூக பிரமுகர்களை இன்று திங்கள்கிழமை சந்திக்கவுள்ளதாக மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் தெரிவிப்பதாக “அல் ஜசீரா” செய்தி வெளியிடுள்ளது.
தற்போதைய அமீர்  அவர்களின் 33 வயதுடைய மகன் ஷேக் தமிம் பின் ஹாமத் அவர்கள் கத்தாரின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பார் என பரவலாக பேசப்படும் நிலையில்  இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த தலைமைத்துவ மாற்றம் பற்றி கத்தாரின் நட்பு நாடுகளுக்கு ஏற்கனவே தெளிவு படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றம்  எந்த திகதியில் இருந்து இது நடைமுறைக்கு வருகின்றது என்பது இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை.
எனினும் இந்த மாற்றம் இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய 61 வயதுடைய கத்தாரின் அமீர் ஷேக் ஹாமத் பின் கலீபா அல் தானி அவர்களில் உடல் நல பிரச்சினை காரணமாகவே இந்த தலைமைத்துவ மாற்றம் ஏற்படவுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தற்போதைய அமீர் ஷேக் ஹாமத் பின் கலீபா அல் தானி அவர்கள் தனது தந்தை வெளிநாடு சென்றிருந்த வேளை இரத்தம் சிந்தாத ஆட்சிக் கவிழ்ப்பு மூலமாகவே கத்தாரின் ஆட்சியை 1995 ஆம் ஆண்டு கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Al Jazeera
Sheikh Tamim bin Hamad, the 33-year-old crown prince is to take over the leadership of the gas-rich Gulf state
Sheikh Tamim bin Hamad, the 33-year-old crown prince is to take over the leadership of the gas-rich Gulf 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger