அமெரிக்காவின் பதில் துணைச் சட்ட மா அதிபர் இலங்கையின் யாழ்ப்பாணம் வடமராட்சியை பூர்வீகமாகக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க பதில் துணைச் சட்ட மா அதிபராக மைதிலி ராமன் என்பவர் கடமையாற்றி வருகின்றார்.
உலக வங்கியின் நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வரும் ஏ.தர்மரட்னம் என்பவரின் புதல்வியான மைதிலி ராமன் துணைச் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மைத்லி ராமன், இலங்கை வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் சீ.லோகநாதனின் பேர்த்தி எனத் தெரிவிக்கப்படுகிறது.
மைதிலி ராமனின் பெற்றோர் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்க நீதித் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவின் பதில் துணைச் சட்ட மா அதிபராக மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment