ஆணும் பெண்ணும் அறையில் இருப்பது விபசாரமல்ல! புதிய விளக்கம்??



பெண்ணொருவரும் ஆண்ணொருவரும் தனியாக அறையில் இருப்பதை விபசாரமாக எடுத்துக் கொள்ளமுடியாது என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.
யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
யாழ். நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு ஒரு ஜோடியினர் யாழ். பிரதேச செயலாளரினால் பிடிக்கப்பட்டனர்.
இவ்விடயம் தொடர்பாக, விடுதி முகாமையாளரினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் பிரதேச செயலாளரின் நடவடிக்கை தவறானது என சுட்டிக் காட்டப்பட்டது.
மேற்படி விவகாரம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அதன்போது குறித்த விடுதி முறையற்ற ரீதியில் நடத்தப்படுவதாக யாழ். பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுபானசாலைக்கான வரி அனுமதியின்றி விடுதி நடத்தப்படுவதாக கிடைத்த தகவல்களை அடுத்து அவ்விடயம் தொடர்பாக ஆராய சென்றவேளையிலேயே குறித்த யுவதி இளைஞருடன் தனியாக இருந்ததாகவும் யுவதியிடம் அடையாள அட்டை இல்iலாத நிலையில் இருந்தார் என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அங்கிருந்த யுவதியை மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தேன், பெண்கள் அமைப்பின் படி தான் செய்தது சரியென்றும் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினார்.
என்னை பொறுத்தவரையில், 18 வயது பெண்ணும், 21 வயது ஆணும் தனியாக அறையில் இருப்பது விபசாரமல்ல, காசுக்காக பெண்ணொருவர் பல இளைஞர்களுடன் இருப்பது தான் விபசாரமாகும்.
அவ்வாறு யாழ்.நகரில் விபசாரம் நடக்கின்றது என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து அது உறுதிப்படுத்தப்படுமாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.
வடக்கில், வேறு கலாசாரம், தெற்கில் வேறு கலாசாரம் ஆனால், வடக்கிலும், தெற்கிலும் சட்டம் ஒன்று தான், நாங்கள் சட்டத்தின் படி பார்க்கின்றோம் என்றார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger