தொலைகிறது பாலமீன்மடு மதுபானசாலை, மக்கள் போராட்டத்தின் வெற்றி / இரண்டு பக்கட் சிகரட் வைத்திருந்தவருக்கு 82 ஆயிரம் ரூபா விதிப்பு


 

தொலைகிறது பாலமீன்மடு மதுபானசாலை, மக்கள் போராட்டத்தின் வெற்றி-
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பாலமீன்மடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடாத்தப்பட்டிருந்தது. பாலமீன்மடு மற்றும் திராய்மடு, முகத்துவார பொதுமக்கள், பொது அமைப்புகள், மகளிர் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், ஆலயங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இன்றுகாலை முகத்துவாரம் வெளிச்சவீட்டு சந்தியில் இருந்து பெண்கள், ஆண்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கைகளில் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு இந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் மதுபானசாலையை மூடு, மீனவர்களின் வாழ்வை சீரழிக்காதே, மட்டக்களப்பில் மதுபானசாலை அமைக்க அனுமதி வழங்காதே போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.
பாலமீன்மடுவில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்திலும் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.
மீனவர்கள் மற்றும் கூலிதொழில்களை செய்வோர் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் மதுபானசாலை அமைக்கப்படுவதன் காரணமாக தமது குடும்பம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடியில் ஈடுபடும் தமது கணவன்மார் மாலை வேளைகளில் மதுபானசாலையே கதியென இருப்பதாகவும் இதனால் தினமும் தாங்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மதுபானசாலைபோன்று கிராமங்களில் வீடுகளில் விற்பனை செய்யப்படும் சட்டவிரோத மதுபானத்தையும் தடை செய்ய வேண்டும் எனவும் இமக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஸ்தலத்துக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), இரா.துரைரெட்ணம், பிரசன்னா இந்திரகுமார், கிருஸ்ணபிள்ளை ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தமது ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஆர்ப்பாட்ட மறியல் போராட்டத்தில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. சம்பவ இடத்துக்குவந்த மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணவர்த்தன மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.
எனினும் முறையான அனுமதி பெற்றே மதுபானசாலை திறக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்த போதிலும், பொதுமக்களின் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்டதன் காரணமாக குறித்த மதுபானசாலையை இயங்க அனுமதிக்க முடியாது என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த மதுபானசாலையை மூடுவதாகவும் அதன் அனுமதியை ரத்துச் செய்வதாகவும் பிரதேச செயலாளர் கிரிதரன் உறுதியளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த மதுபானசாலையில் உள்ள பொருட்கள் அகற்றப்படும் வரையில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பாதுகாப்புக்கு அமர்த்துவதாக பொலிஸ் பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கலைந்து சென்றுள்ளனர்.
இரண்டு பக்கட் சிகரட் வைத்திருந்தவருக்கு 82 ஆயிரம் ரூபா விதிப்பு-
அம்பாறை, அட்­டா­ளைச்­சேனை பால­முனை பிர­தே­சத்தில் தீர்வை செலுத்­தப்­ப­டாமல் இலங்­கைக்குள் கொண்டு வரப்­பட்ட கோல்சீல் ரக சிக­ரெட்கள் 400 ஐ வைத்­தி­ருந்த நபர் ஒரு­வரை அக்­க­ரைப்­பற்று பொலிஸார் கைது செய்­துள்ளனர்.
கைது செய்­யப்­பட்­டவர் கடந்த புதன் கிழமை அக்­க­ரைப்­பற்று நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ரி.சர­வ­ண­ராஜா எண்­பத்­தி­ரண்­டா­யிரம் ரூபா அப­ராதம் விதித்தார்.
அக்­க­ரைப்­பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜன் யூ.எல்.எஸ்.ஆப்தீன் தலை­மை­யி­லான குழு­வினர் இர­க­சிய தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் கடந்த 24 ஆம் திகதி காலை அட்­டா­ளைச்­சேனை பால­முனை பிர­தான வீதியில் உள்ள தேநீர்க் கடை ஒன்றின் உரி­மை­யா­ளரை 400 சட்­ட­வி­ரோத சிக­ரட்­டு­க­ளுடன் கைது செய்­துள்ளனர்.
கைது செய்­யப்­பட்­டவர் பொலிஸ் பிணையில் விடு­விக்­கப்­பட்டு பின் கடந்த புதன்­கி­ழமை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார்.
ஏற்­க­னவே ஒரு தடவையும் இருபததோராயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger