நாட்டிற்கு
அண்மித்த வளிமண்டலத்தில் காணப்படுகின்ற குழப்பநிலை காரணமாக நாட்டின் கூடிய
பிரதேசங்கள் முகில் கூட்டங்களில் மூடப்பட்டு காணப்படுவதுடன், மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்களிலில் கூடிய மழை வீழ்ச்சிகளுடன் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் இடி மின்னலினால் ஏற்படும் சேதங்களை குறைத்துக்கொள்வதற்கு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
கிழக்கு, தென்கிழக்கு கரையோரப் பகுதிகளுக்கு அப்பாற்பட்ட கடல் பிரதேசங்களிலில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் கடல் இடைக்கிடை கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment