மோசமான வன்முறைகளுக்கு மத்தியிலும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டுவந்த பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடக்கிறது.
வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோதும் பல இடங்களில் வன்முறைகள் தொடர்ந்தும் நடந்துள்ளன.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.கராச்சியில் அவாமி தேசியக் கட்சியின் அலுவலகத்துக்கு வெளியில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பெஷாவர் நகரில் நடந்த இன்னொரு தாக்குதல் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
ஆனால் பாகிஸ்தான்- தாலிபன்களிடமிருந்து கடுமையான அச்சுறுத்தல்கள் வெளிப்பட்டிருந்த போதிலும், வாக்குப்பதிவு அதிகளவில் நடந்துவருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் நீதிக்கான இயக்கம் என்ற கட்சியுமே தேர்தல் களத்தில் மும்முரமாக நிற்கின்றன.
Post a Comment