ஜீன்ஸ்பேன்ட், டீசர்ட் அணிந்து வந்த அந்த பெண்ணின் பெயர் வீணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசிரியையான இவர் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார்.
அந்த பகுதியை சேர்ந்த சஞ்சய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பிளஸ்-1 மாணவர் வீணாவிடம் டியூசன் படிப்பதற்காக சென்றார். சஞ்சயின் பெற்றோர் கேரளாவை சேர்ந்தவர்கள். பிழைப்புக்காக குடும்பத்துடன் சென்னைக்கு புலம்பெயர்ந்தனர்.
ஒரு தனியார் நிறுவனத்தில் நாலு இலக்க சம்பளத்தில் வேலை பார்த்து வரும் சஞ்சயின் தந்தை மகன் நன்றாக படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை கனவுகளுடன் 9-ம் வகுப்பு முதல் வீணாவிடம் டியூசனுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ஆசிரியை வீணா பள்ளி பாடத்தை படித்து கொடுப்பதைவிட அவனுக்கு காதல் பாடம் நடத்துவதில் ஆர்வம் காட்டினார்.
புது சுகம்... புதிய அனுபவம்... சஞ்சய் பாடத்தை மறந்தான். ஆசிரியையை மறக்க முடியாமல் தவித்தான். இதை எதிர்பார்த்த வீணா வா... என் அருகில் வா... என்று அன்பு கட்டளையிட்டாள்.
வீட்டை மறந்த சஞ்சய் வீணாவின் மடியில் தஞ்சம் புகுந்தான். சஞ்சயின் போக்கில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர் ரகசியமாக கண்காணிக்க தொடங்கினார்கள். வீணாவின் செல்போனில் இருந்து சஞ்சய் செல்போனுக்கு வந்த ஆபாச எஸ்.எம்.எஸ்.சுக்களை பார்த்து அதிர்ந்து போனார்கள். வீட்டுக்குள் புயல் வீசியது.
ஆனால் எதைப்பற்றியும் கண்டு கொள்ளாத சஞ்சய் வீணாவின் அன்பு பிடிக்குள் கட்டுப்பட்டு கிடந்தான். ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு உல்லாச பயணம் போனார்கள்.
பெற்றோர் தடுத்தும் கேட்காமல் உல்லாச பயணம் சென்று உல்லாசமாய் இருந்து இருக்கிறார்கள். பேஸ்புக்கில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானது. அதை பார்த்து பிறகு இனியும் பொறுமையாக இருப்பது நல்லதல்ல என்று சஞ்சயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வீணாவின் வீட்டுக்கு திடீரென்று வந்தனர்.
அந்த மாலைப்பொழுதின் மயக்கத்தில் இருவரும் காதல் மயக்கத்தில் இருந்ததை நேரில் பார்த்ததும் அதிர்ந்தார்கள். கோபம் கொப்பளிக்க இரு வரையும் துவைத்து விட்டனர். வாங்கிய அடியை பற்றி கவலைப்படாமல் நான் இங்குதான் இருப்பேன் என்று சஞ்சய் கூறியதை கேட்டதும் எல்லோரும் ஆடிப்போனார்கள்.
அந்த நேரத்தில் அந்த வழியாக ரோந்து வந்த பொலிசார் அவர்களை சமாதானப்படுத்தி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இருவரிடமும் விசாரித்துவிட்டு இனிமேல் அந்த பக்கம் நீ போகக்கூடாது என்று சஞ்சயிடமும் அவனை நீ கூப்பிட்டால் உள்ளே தள்ளி விடுவோம் என்று எச்சரித்து அனுப்பினார்கள்.
இனிமேலும் இங்கிருந்தால் வீணாவால் மகன் வீணாய் போவான் என்று குடும்பத்துடன் கேரளாவுக்கு மூட்டை கட்டி விட்டார்கள். களிமண்ணைகூட அற்புதமான சிற்பமாக உருவாக்குபவர்கள்தான் ஆசிரிய பிரம்மாக்கள். அதனால்தான் யாருக்கும் இல்லாத மதிப்பும், மரியாதையும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் சிலரது சபலங்கள் பல தலைமுறைகளை பாழாக்கி விடுகிறது.
சமீபத்தில் பாரிமுனையில் பள்ளி ஆசிரியை குமுது ஒரு மாணவனோடு ஓடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த மக்களும் காறி உமிழாத குறையாக திட்டி தீர்த்தார்கள்., அந்த வரிசையில் இப்போது திருமணமான 32 வயது வீணா...
Post a Comment