தமிழ் நாட்டில் பல பாகங்களிலும் முகாங்களில் வாழும் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா தனது உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. இந்தியாவில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் வாழ்ந்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக 1.5 மில்லியன் டொலர் உதவிகள் வழங்கப்பட உள்ளது.
|
புகலிடக் கோரிக்கையாளர்களின் உளச் சுகாதாரம், பால்நிலை சமத்துவம், சிறுவர் கல்வி, பாடசாலை இடைவிலகலைத் தடுத்தல், சிறுவர் மற்றும் மகளிர் வலுவூட்டல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இந்த நிதி உதவி பயன்படுத்தப்படவுள்ளது. வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் குறித்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
|
இந்தியாவிலுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் அமெரிக்கா நிதியுதவி வழங்கத் தீர்மானம்!
Labels:
சர்வதேசம்
Post a Comment