காலியில் பாதுகாப்புச் செயலாளர் திறந்து வைத்த மெத் செவன கட்டிடத்திலிருந்து பொதுபல சேனாவை உடனடியாக வெளியேறுமாறு காலி மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
படகொட கமகே அசங்க என்ற சிங்களவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிவான் குநேந்திர முனசிங்க இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
மெத் செவன கட்டிடத்தை பொது பல சேனாவுக்கு வழங்கியதாக கூறப்படும் லிட்டில் ஸ்மைல் என்ற அரச சார்பற்ற நிறுவனத்துடன் சேர்த்து ஞானசார தேரரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மெத் செவன கட்டிடத்திலிருந்து பொதுபல சேனாவை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Post a Comment