வீட்டு உரிமையாளர் அடித்ததால் ஓடிய பணிப்பெண்ணுக்கு அபராதம்: பஹரேன் நீதிமன்றில் அபூர்வ தீர்ப்பு! / அறிக்கை ஆறு மாத்தில் தயார்


 

008வீட்டு உரிமையாளர் அடித்ததால் ஓடிய பணிப்பெண்ணுக்கு அபராதம்: பஹரேன் நீதிமன்றில் அபூர்வ தீர்ப்பு!
இலங்கை பணிப்பெண் தொடர்பில் பஹரேன் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மனித உரிமை அமைப்புக்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. சுசிலா ஜயதிலக்க என்ற 49 வயது இலங்கை பணிப்பெண் தான் பணிபுரிந்த வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்டபோது வீட்டு உரிமையாளரிடம் இருந்து தப்பித்து ஓடியதால் 590 பஹரேன் தினார் அபராதமாகச் செலுத்த வேண்டும் என பஹரேன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
10 வருடங்களாக பஹரேனில் பணிபுரிந்த சுசிலா ஜயதிலக, கடந்த 10 மாதங்களாக தவறாக வழிநடாத்தப்பட்டதால் பணிபுரிந்த வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
பணிபுரிந்த வீட்டு உரிமையாளருக்கு எதிராக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் உதவியுடன் சுசிலா நீதிமன்றில் வழக்கும் பதிவு செய்துள்ளார்.
எனினும் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க ஒரு வருட காலம் எடுத்துக் கொண்ட அவசர விவகார நீதிமன்றம், குறித்த இலங்கை பணிப்பெண்ணின் வீட்டு உரிமையாளர் தாக்கல் செய்த வழக்கொன்றை விசாரித்துவிட்டு அபூர்வ தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
வேலை ஒப்பந்தத்தை மீறியதால் 600 பஹரேன் தினார் நட்டஈடு வேண்டும் எனக் கோரி வீட்டு உரிமையாளர் சுசிலா ஜயதிலகவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வீட்டு உரிமையாளருக்கு 580 பஹரேன் தினாரும் நீதிமன்ற செலவுக்கு 10 பஹரேன் தினாரும் அபராதம் செலுத்துமாறு சுசிலா ஜயதிலகவிற்கு தீர்ப்பளித்துள்ளார்.
இந்த தீர்ப்பினால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரி மெரிட்டா டயஸ் தெரிவித்துள்ளார்.
அவிசாவளை கிராம புரத்தைச் சேர்ந்த சுசிலா ஜயதிலக 2011ம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாக பஹரேன் சென்றுள்ளார்.
வேலைக்குச் சென்று மூன்று மாதங்கள் நன்கு கவனிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் 60 பஹரேன் தினாருக்கு அனைத்துவகையான வேலைகளையும் செய்யுமாறு துன்புறுத்தியதாகவும் சுசிலா ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஆறு மாத்தில் தயார்-
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்று சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸவை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் சந்தித்துள்ளனர்.
சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த ஆணைக்குழுவின் தலைவியும் முன்னாள் நாடாளுமன்ற பொதுச் செயலாளரான பியாணி விஜேசேகர, தமது ஆணைக்குழு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் அறிக்கையிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையானது ஆறு மாதத்தில் தயார் செய்யப்பட்டு, சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger