பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவது உயர்ந்து செல்கிறது -மங்கள / அமைச்சர்கள், இராஜதந்திரிகள் இலங்கை வருகை / தமிழக அகதி முகாம்களில் அறிவுறுத்தல்


 

Mangala-Samaraweera-pressபெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவது உயர்ந்து செல்கிறது -மங்கள-
பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவது மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் இந்த ஆட்சிக்காலத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் இவற்றை தடுப்பதற்கு அரசிடம் எதுவிதமான திட்டமும் இல்லை என்று மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்துள்ளார்.
அனைத்தையும் பார்த்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டுள்ளனர். இன்று இலங்கையில் பிறப்பதற்கும் ஏன் இறப்பதற்கும் ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயம் உருவாக்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், இராஜதந்திரிகள் இலங்கை வருகை-
முக்கிய நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகள் இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். தாய்லாந்து, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அதேவேளை, அசர்பைஜான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கை வரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரொட்னி பெரேரா கூறினார்.
புதன்கிழமை இரவு தாய்லாந்து நாட்டின் பிரதி பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுரபொவ் டொவிச் சாக்சாய்குள் மற்றும் ஜப்பான் பிரதிப் பிரதமரும் நிதியமைச்சருமான டாரோ அசோ தலைமையிலான தூதுக்குழுவும் இலங்கை வந்தடைந்துள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கான குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் பிரெண்டன் ஒ கொனர் நேற்று இலங்கை வந்தடைந்தார்.
இவர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியபல அரசியல் தலை வர்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் வருகின்றனர்.
நாடுகளுக்கிடையிலான உறவினை வலுப்படுத்தும் வகையில் நல்லெண்ண அடிப்படையில் இந்த வெளிநாட்டுப் பிரஜைகளின் விஜயம் அமைந்திருப்பதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
சட்ட விரோதக் குடியகல்வு மற்றும் ஆட்கடத்தல்களை தடுத்து நிறுத்தும் வகையில் இலங்கை, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து நடைமுறைப் படுத்தும் செயற் திட்டம், அவுஸ்திரேலியாவுக்கான குடிவரவு அமைச்சரின் வரு கையுடன் மேலும் பயனுடையதாக்கப் படுமென எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் 06 ஆம் திகதி அசபர்ஜான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழக அகதி முகாம்களில் அறிவுறுத்தல்-
இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா செல்வதை தடுக்கும் வகையில் இந்திய கடலோர காவற்துறையினர் தமிழக அகதி முகாம்களில் அறிவுறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மண்டபம், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட பல முகாம்களில் இந்த அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து அவுஸ்திரேலியா செல்வபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக அகதி முகாம்களில் சோதனையிடப்பட்டதாகவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, அவுஸ்திரேலியா அழைத்து செல்வதாக கூறுபவர்களை நம்ப வேண்டாம் எனவும், அங்கு செல்பவர்கள் ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் எனவும் தமிழக கடலோர காவற்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger