சட்ட விரோதமான முறையில் இரண்டரை கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஊவா பறணகம பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை, உஹனை பிரதேசத்திலிருந்து நீண்ட காலமாக வெலிமடை ஊவா பறணகம பிரதேசத்திறகு கஞ்சா கடத்தி விற்பணையில் ஈடுபட்டு வந்த சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நேற்று ஊவா பறணகம பிரதேசத்தில் வழிமறித்த பொலிஸார் சந்தேக நபரிடம் இருந்து பொதிசெய்யப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சாவை கைப்பற்றியதோடு சந்தேக நபரை கைது செய்த வெளிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் விஜயசேகரவின் பணிப்புரைக்கமைய மேலதிக விசாரணைகளை ஊவா பறணகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழு மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment