பேஸ்புக்கால் ஏற்பட்ட விபரீதம்!



பேஸ்புக் நண்பர்களால் கடத்தப்பட்ட சிறுவனொருவன் பின்னர் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட சம்பவமொன்று பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கும் சிறுவன் முஸ்தபா (13). தினமும் 24 மணி நேரமும் இணையதளத்தில் மூழ்கியிருந்த முஸ்தபா, 'பேஸ் புக்' மூலம் முகம் தெரியாத புதிய நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தான்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு பேஸ் புக்கில் அறிமுகமான சிலர் முஸ்தபாவை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை புதிய தோழரை எதிர்பார்த்து சென்ற முஸ்தபாவை அவர்கள் கடத்திச் சென்று பலூசிஸ்தான் மாகாணத்தில் ஓர் இரகசிய இடத்தில் அடைத்து வைத்தனர்.


முஸ்தபாவின் தந்தை கராச்சி சுங்கத்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரை கையடக்கத்தொலைபேசியில் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், முஸ்தபாவை விடுவிக்க சுமார் 10 கோடி ரூபாவை கப்பமாக கேட்டுள்ளனர்.

இதைக் கொடுக்கத் தவறும் பட்சத்தில் சிறுவனைக் கொன்று விடுவோம்' எனவும் மிரட்டியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சிறுவனது தந்தை கராச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவருக்கு தொடர்ந்து வந்த அழைப்புகளை ரகசியமாக கண்காணித்த பொலிஸார் கையடக்கத்தொலைபேசி சிக்னலின் படி, கடத்தல்காரர்களின் இரகசிய இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த வீட்டை முற்றுகையிட்டு கடத்தல்காரர்கள் 4 பேரை சுட்டுக்கொன்ற பொலிஸார் சிறுவன் முஸ்தபாவை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மகனின் அருகில் அமர்ந்தபடி பெண்களுக்கு கோரிக்கை விடுத்த முஸ்தபாவின் தாயார், 'பேஸ் புக் போன்ற இணைய தளங்களில் தங்கள் பிள்ளைகள் இணையாதபடி அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

இல்லையென்றால், என் மகனுக்கு ஏற்பட்டது போன்ற சூழ்நிலையோ அல்லது அதைவிட மோசமான கதியோ உங்கள் பிள்ளைகளுக்கும் ஏற்படலாம்' என்று கூறியுள்ளார்
.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger