மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள முஸ்லிம்களுக்கென மாடு மற்றும் ஆடு அறுக்கும் மடுவத்திற்கு எந்தவகையிலும் பாதிப்பில்லாத வகையிலும் இதற்கு தொடர்பு இல்லாத வகையிலுமே பன்றிகளை அறுப்பதற்கான இடம் அமைக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள சத்துறுக்கொண்டான் பகுதியில் முஸ்லிம்களுக்கென மாடு மற்றும் ஆடு அறுக்கும் மடுவத்திற்கு அருகில் பன்றிகளை அறுப்பதற்கான மடுவம் ஒன்று கட்டப்படுவது குறித்து மட்டக்களப்பு கோட்டமுனை மஸ்ஜிதுல் யூசுபிய்யா பள்ளிவாயல் நிருவாகம் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிருவனங்களின் சம்மேளனத்திற்கு தெரியப்படுத்திதையடுத்து சம்மேளனம் ஆட்சேபம் தெரிவித்து எழுத்து மூலம்மாநகர ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியதுடன் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்துமாறு மாவட்ட முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு தெரிவித்திருந்தது இதையடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சிப்லி பாறூக் உட்பட மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், மட்டக்களப்பு மாநகர சபையின் கால் நடை வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி அமிர்தலிங்கம் ஆகியோர் புதன்கிழமை இன்று குறித்த மடுவம் அமையப்பெற்றுள்ள இடத்திற்கு சென்று அதை பார்வையிட்டனர்.
இதன் போதே முஸ்லிம்களுக்கென மாடு மற்றும் ஆடு அறுக்கும் மடுவத்திற்கு எந்தவகையிலும் பாதிப்பில்லாத வகையிலும் அதற்கு தொடர்பு இல்லாத வகையிலுமே பன்றிகளை அறுப்பதற்கான இடம் அமைக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கிடம் உறுதியளித்தார்.
குறித்த முஸ்லிம்களுக்கென மாடு மற்றும் ஆடு அறுக்கும் மடுவத்திற்கு எந்தவகையிலும் பாதிப்பில்லாத வகையிலும் அதற்கு தொடர்பு இல்லாத வகையிலும் வௌ;றோக இவைகள் பராமரிக்கப்படுமெனவும் மாநகர ஆணையாளர் இதன் போது குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் எந்த இடத்திலும் இதற்கான அரச காணியொன்றினை பெற்றுக்கொள்ள முடிhயத நிலையிலேயே
இந்த இடத்தில் இம் மடுவங்களை அமைக்க வேண்டி ஏற்பட்டது என குறிப்பிட்ட ஆணையாளா
மாடு ஆடு அறுக்கும் மடுவத்திற்கும் பன்றிகள் அறுக்கும் இடத்திற்கும் வௌ;வேறு வழிகள் அமைக்கப்படுவதுடன் இதற்கு தொடர்புகள் இல்லாத வகையில் இந்த மடுவங்களை பராமரிப்பதற்காக மட்டக்களப்பு மாநகர சபையினால் வௌ;வேறான சுகாதார தொழிலாளிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் சிவநாதன் மேலும் குறிப்பிட்டார்.
மாடு ஆடு அறுக்கும் மடுவத்திற்கும் பன்றிகள் அறுக்கும் இடத்தற்கும் எந்த ஒரு தொடர்புகளும் இருக்கக் கூடாது என்றும் அதற்காக தொடர்புகள் இல்லாத வகையில் புறம்பான சுவர் ஒன்றை அமைக்க வேண்டுமெனவும் இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மாநகர ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட மாநகர ஆணையாளர் அதற்கான சுவரும் அமைப்பதாக தெரிவித்தார்.
Post a Comment