தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி மட்டுமன்றி தீவிரவாதத்தை தூண்டும் பல நபர்கள் பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
திவையின சிங்கள பத்திரிகை பேட்டி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் . மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் .
பிரபாகரன் அன்று ஆயுதம் ஏந்திய போது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் இளைஞர்களின் பருவக் கோளறாக இந்த போராட்டத்தைக் கருதினார். எனினும், இறுதியில் அமிர்தலிங்கம் அதற்கு தனது உயிரை விலையாகக் கொடுத்தார்.
இந்தியாவில் அஸாத் சாலி வெளியிட்ட கருத்தின் காரணமாகவே அஸாத் சாலி கைது செய்யப்பட்டார். பாதுகாப்புச் செயலாளராக நான் கடமையாற்றும் வரையில் தீவிரவாதத்திற்கு இடமில்லை.அஸாத் சாலியினால் பிரபாகரனாக உருவாக முடியாது, பிரபாகரன்கள் உருவாகுவதற்கோ அல்லது உருவாக்கப்படுவதற்கோ நான் இடமளிக்க மாட்டேன்.
அஸாத் சாலி கைது செய்யப்பட்டமைக்காக முதலைக் கண்ணீர் வடிப்போர் பற்றியும் நாம் நன்றாக அறிவோம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment