வங்கதேசத்தில் டாக்காவுக்கு அருகே நடந்த கட்டிட விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 400ஐத் தாண்டியிருப்பதாக அதிகாரிகள் இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
இதில் பல டஜன் கணக்கானோர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர்.
இதனிடையே, கடந்த வாரம் நடந்த இந்த கட்டிட விபத்தை அடுத்து, பாதுகாப்பு விதிமுறைகளை பலப்படுத்தவேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் டாக்காவின் மையப்பகுதியின் ஊடாக ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.
இந்த கட்டிட உரிமையாளருக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
கட்டிட உரிமையாளரான, மொஹமது சோஹல் ரானா, திட்ட அனுமதி பெறாமலேயே, இந்த கட்டிடத்துக்கு கூடுதல் மாடிகளைக் கட்டினார் என்று கூறப்படுகிறது. இவரை போலிசார் விசாரித்து வருகிறார்கள்.
Post a Comment